Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
அமெரிக்காவின் முடிவால் கச்சா எண்ணெய் விலை மீண்டும் சரிவு!

அமெரிக்காவின் முடிவால் கச்சா எண்ணெய் விலை மீண்டும் சரிவு!

2 hours ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

ஈரான் மீது திட்டமிடப்பட்டிருந்த இராணுவ நடவடிக்கைகளை அமெரிக்கா கைவிட்டதைத் தொடர்ந்து, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைகள் இன்று மீண்டும் குறைவடைந்துள்ளன.

நேற்று அமெரிக்க டொலர் 90 எல்லையைத் தாண்டி உயர்ந்திருந்த கச்சா எண்ணெய் விலை, புதிய அரசியல் சூழ்நிலையால் இன்று மீண்டும் அந்த மட்டத்திற்குக் கீழ் சரிந்துள்ளது.

இன்றைய சந்தை நிலவரப்படி, ப்ரெண்ட் கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய் 89.33 அமெரிக்க டொலராகவும், மர்பன் கச்சா எண்ணெய் 87.25 அமெரிக்க டொலராகவும் விற்பனையாகியுள்ளது. அதேவேளை, அமெரிக்காவின் WTI கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு 86.74 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.

அமெரிக்கா ஈரானுக்கு எதிராக வான்வழித் தாக்குதல்களை முன்னெடுக்கத் தயாராக இருப்பதாக வெளியான தகவல்களைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றம் அதிகரித்திருந்தது. இதன் எதிரொலியாக, உலக எரிசக்தி போக்குவரத்தில் முக்கியத்துவம் வாய்ந்த ஹோர்முஸ் நீரிணை தொடர்பாக ஈரான் எடுத்த நடவடிக்கைகள் சந்தையில் அச்சத்தை ஏற்படுத்தின.

இந்த புவிசார் அரசியல் பதற்றம் காரணமாக, நேற்று கச்சா எண்ணெய் விலைகள் வேகமாக உயர்ந்திருந்தன. ப்ரெண்ட் கச்சா எண்ணெய் 2.47 சதவீதம் உயர்ந்து ஒரு பீப்பாய் 95.40 அமெரிக்க டொலராகவும், WTI கச்சா எண்ணெய் 2.89 சதவீதம் உயர்ந்து ஒரு பீப்பாய் 92.63 அமெரிக்க டொலராகவும் அதிகபட்ச விலையை எட்டியிருந்தது.

எனினும், அமெரிக்கா தனது தாக்குதல் திட்டங்களை நிறுத்தியதன் மூலம் ஏற்பட்ட நெருக்கடி தளர்வு, சர்வதேச எண்ணெய் சந்தையில் மீண்டும் விலைச் சரிவை ஏற்படுத்தியுள்ளதாக பொருளாதார ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

அனுமதிப்பத்திரமின்றி 6,000 கிலோ கழிவுத் தேயிலை கடத்தியவர் கைது!
செய்திகள்

அனுமதிப்பத்திரமின்றி 6,000 கிலோ கழிவுத் தேயிலை கடத்தியவர் கைது!

June 12, 2026
தென் கொரிய முன்னாள் ஜனாதிபதி யூன் சுக் இயோலுக்கு 30 ஆண்டு சிறைத்தண்டனை!
உலக செய்திகள்

தென் கொரிய முன்னாள் ஜனாதிபதி யூன் சுக் இயோலுக்கு 30 ஆண்டு சிறைத்தண்டனை!

June 12, 2026
ரணிலுக்கு “புதிய உடல், புதிய இதயம்” பொருத்தப்பட்டுள்ளது; ஹரீன் பெர்னாண்டோ
செய்திகள்

ரணிலுக்கு “புதிய உடல், புதிய இதயம்” பொருத்தப்பட்டுள்ளது; ஹரீன் பெர்னாண்டோ

June 12, 2026
“ஈழத்து மருமகன் என்ற வகையில் எங்களுக்கு உரிமை உண்டு”; முதலமைச்சர் விஜயிடம் கோரிக்கை!
செய்திகள்

“ஈழத்து மருமகன் என்ற வகையில் எங்களுக்கு உரிமை உண்டு”; முதலமைச்சர் விஜயிடம் கோரிக்கை!

June 12, 2026
பயிர் செய்கையில் முதலீடு செய்யுமாறு மோசடி செய்யும் கும்பல்; மத்தியவங்கி எச்சரிக்கை
செய்திகள்

பயிர் செய்கையில் முதலீடு செய்யுமாறு மோசடி செய்யும் கும்பல்; மத்தியவங்கி எச்சரிக்கை

June 12, 2026
அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு வானிலை எச்சரிக்கை; பலத்த காற்று, இடியுடன் மழைக்கு வாய்ப்பு
செய்திகள்

அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு வானிலை எச்சரிக்கை; பலத்த காற்று, இடியுடன் மழைக்கு வாய்ப்பு

June 12, 2026
Next Post
ஏறாவூர் பாடசாலை ஒன்றின் அதிபர் இடமாற்றத்திற்கு எதிராக போராட்டம்

ஏறாவூர் பாடசாலை ஒன்றின் அதிபர் இடமாற்றத்திற்கு எதிராக போராட்டம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு