Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சொல்லிசை கலைஞர் சங்கீத்சனுக்கு பிணை; PTA பிரிவுகளை நீக்க சட்டமா அதிபர் பணிப்புரை

சொல்லிசை கலைஞர் சங்கீத்சனுக்கு பிணை; PTA பிரிவுகளை நீக்க சட்டமா அதிபர் பணிப்புரை

2 hours ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த தமிழ் சொல்லிசை கலைஞர் சங்கீத்சன் கணேச்குமாரை பிணையில் விடுவிக்க சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றம் இன்று (12) உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஜூன் மாதம் கைது செய்யப்பட்ட சங்கீத்சன், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (PTA) கீழ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார். அவரது கைது சமூக மற்றும் அரசியல் வட்டாரங்களில் பரவலான கவனத்தை ஈர்த்திருந்தது.

இந்நிலையில், இன்று வழக்கு நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டபோது, அவரை பிணையில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அத்துடன், சங்கீத்சனுக்கு எதிராகப் பயன்படுத்தப்பட்டிருந்த பயங்கரவாதத் தடைச் சட்டப் பிரிவுகளை முழுமையாக நீக்குமாறு சட்டமா அதிபர் திணைக்களம் பொலிஸாருக்கு பணிப்புரை வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி, PTA சட்டத்தின் கீழ் தொடரப்பட்ட நடவடிக்கைகளை கைவிட்டு, தேவையானால் தண்டனைச் சட்டக் கோவை (Penal Code) பிரிவுகளின் கீழ் வழக்குத் தாக்கல் செய்யுமாறும் சட்டமா அதிபர் அறிவுறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சட்டமா அதிபரின் இந்த தீர்மானம் இன்று நீதிமன்றத்தில் அறிவிக்கப்பட்டதாகவும், இதன் மூலம் சங்கீத்சனுக்கு எதிரான PTA குற்றச்சாட்டுகள் நீக்கப்பட்டுள்ளன என்றும் தெரிவிக்கப்படுகிறது.

சங்கீத்சனின் கைது மற்றும் தடுப்புக் காவல் தொடர்பாக மனித உரிமை அமைப்புகள், சிவில் சமூக பிரதிநிதிகள், கலைஞர்கள் மற்றும் அரசியல் கட்சிகள் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்திருந்த நிலையில், இன்றைய நீதிமன்ற நடவடிக்கையும் சட்டமா அதிபரின் பணிப்புரையும் வழக்கில் முக்கிய திருப்புமுனையாக பார்க்கப்படுகிறது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

மானிப்பாய் பிரதேச சபை உறுப்பினருக்கு விசேட சலுகையா?; மயானக் கட்டண விவகாரம் சர்ச்சை!
செய்திகள்

மானிப்பாய் பிரதேச சபை உறுப்பினருக்கு விசேட சலுகையா?; மயானக் கட்டண விவகாரம் சர்ச்சை!

June 12, 2026
ஈஸ்டர் தாக்குதலுக்கும் NPPக்கும் தொடர்பா?; முஸ்லிம் சமூகமே அதிகமாக பாதிக்கப்பட்டது!-இம்ரான் மஹ்ரூப்
அரசியல்

ஈஸ்டர் தாக்குதலுக்கும் NPPக்கும் தொடர்பா?; முஸ்லிம் சமூகமே அதிகமாக பாதிக்கப்பட்டது!-இம்ரான் மஹ்ரூப்

June 12, 2026
அதிக சத்தத்தை எழுப்பும் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் மீது நடவடிக்கை
செய்திகள்

அதிக சத்தத்தை எழுப்பும் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் மீது நடவடிக்கை

June 12, 2026
14 வயது சிறுமியை நீண்டகாலமாக சித்திரவதை செய்ததாக தாய் கைது!
செய்திகள்

14 வயது சிறுமியை நீண்டகாலமாக சித்திரவதை செய்ததாக தாய் கைது!

June 12, 2026
அம்பாறை மாவட்டத்தில் தொடர் மழை; விபத்து அபாயங்கள் குறித்து எச்சரிக்கை
செய்திகள்

அம்பாறை மாவட்டத்தில் தொடர் மழை; விபத்து அபாயங்கள் குறித்து எச்சரிக்கை

June 12, 2026
மருத்துவ ஆராய்ச்சிக்காக மட்டுமே பயன்படுத்தப்படும் எலிப்பால்
செய்திகள்

மருத்துவ ஆராய்ச்சிக்காக மட்டுமே பயன்படுத்தப்படும் எலிப்பால்

June 12, 2026
Next Post
மானிப்பாய் பிரதேச சபை உறுப்பினருக்கு விசேட சலுகையா?; மயானக் கட்டண விவகாரம் சர்ச்சை!

மானிப்பாய் பிரதேச சபை உறுப்பினருக்கு விசேட சலுகையா?; மயானக் கட்டண விவகாரம் சர்ச்சை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு