Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தோட்ட நிர்வாகத்தால் இழுத்து மூடப்பட்ட முன் பள்ளி

தோட்ட நிர்வாகத்தால் இழுத்து மூடப்பட்ட முன் பள்ளி

3 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

மஸ்கெலியா சாமிமலை பகுதியில் உள்ள கவிரவிலை தோட்டத்தின் பெரிய சோலங்கத்தை பிரிவில் உள்ள முன் பள்ளியை தோட்ட அதிகாரி கடந்த 11ஆம் தேதி தன்னிச்சையாக இழுத்துப்பூட்டி உள்ளதாக தெரியவருகின்றது.

குறிப்பிட்ட முன்பள்ளியானது கடந்த 20 வருடங்களுக்கு மேலாக சமூக நிறுவனம் ஒன்றினால் தோட்ட நிர்வாகத்தின் அனுமதியுடன் கட்டி எழுப்பப்பட்டு தேவையான சகல வசதிகளையும் வழங்கி சிறப்பாக நடத்தி வந்த இவ்வேளையில் தோட்டத்தில் உள்ள சிறுவர் பராமரிப்பு நிலையத்தை குறிப்பிட்ட முன்பள்ளியில் நடத்துவதற்காக திட்டமிட்டு தோட்ட அதிகாரியினால் இச்செயற்ப்பாடு முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.

இதற்கு முன் குறிப்பிட்ட தோட்டத்தில் முன்பள்ளி ஒன்று இல்லாத குறையினை நிவர்த்தி செய்வதற்காக கடந்த 20 வருடத்திற்கு முன் இதனை கட்டியெழுப்பி சிறப்பாக நடத்தி வந்த இத்தருணத்தில் தோட்டத்தில் தொழில் புரியும் மற்றும் தொழில் செய்யாத அனைத்து குடியிருப்பாளர்களது பிள்ளைகளும் சிறப்பாக கல்வி கற்று வந்த இச்சந்தர்ப்பத்தில் குறிப்பிட்ட சம்பவம் நடைபெற்றுள்ளது.

குறிப்பிட்ட முன்பள்ளியானது மத்திய மாகாண முன்பிள்ளை பருவ அபிவிருத்தி பிரிவின் கீழ் பதிவு செய்யப்பட்டு கடந்த மூன்று வருடமாக முன்பள்ளி நிரந்தர பதிவிற்கு உள்வாங்கப்பட்டுள்ளமையும் விசேட அம்சமாகும்.

குறிப்பிட்ட முன்பள்ளியை நடத்தி வந்த சமூக நிறுவனம் கடந்த 11-ம் திகதி மஸ்கெலியா போலீஸ் நிலையத்தில் இது தொடர்பாக புகார் செய்துள்ளதுடன் அட்டன் மனித உரிமை காரியாலயத்திற்கும் இது தொடர்பாக அறிவித்துள்ளதாக அறிவித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக பெருந்தோட்ட சமூக உட்கட்டமைப்பு பிரதி அமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளதாகவும் மேலும் இவ்விடயத்தை சிறுவர் மற்றும் மகளிர் அபிவிருத்தி அமைச்சு, தேசிய சிறுவர் பாதுகாப்பு திணைக்களம் போன்றவற்றுக்கும் இது தொடர்பாக அறிவிப்பதற்கு தயாராகி வருகின்றது.

முன்பள்ளி கட்டிடத்தை அமைப்பதற்காக அனுமதி கொடுத்திருந்தாலும் தற்போது அதற்கான காணி உறுதி பத்திரம் இம்மை காரணமாக இந் நடவடிக்கையை சாதகமாக பயன்படுத்துவதற்காக தோட்ட நிர்வாகம் முனைந்து வருவதாக தெரிய வருவதுடன் மக்களின் பலத்த எதிர்ப்புக்கு மத்தியிலும் தோட்ட நிர்வாகத்தின் தன்னிச்சையான இச்செய்ப்பாடு கண்டிக்கத்தக்கதாக உள்ளது.

கடந்த காலங்களில் தோட்ட தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு கடந்த மாதம் பாதுகாப்பு அமைச்சர் தலைமையில் ஒரு கூட்டம் நடைபெற்று அதில் பல்வேறு முடிவுகள் மேற்கொள்ளப்பட்ட இத்தருணத்தில் தொடர்ச்சியாக தொழிலாளர்களையும் அங்குள்ள மக்களையும் அடக்குமுறைக்கு உட்படுத்துவதற்காக இவ்வாறான செயற்பாடுகளை தோட்ட நிர்வாகங்கள் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயம். தோட்ட நிர்வாகத்தின் இவ்வாறான செயற்பாடுகளில் இருந்து மக்கள் அரச கட்டமைப்புக்கு உள்வாங்கப்பட வேண்டுமென பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் இச்சந்தர்ப்பத்தில் இவ்வாறான செயற்பாடுகள் கண்டிக்கத்தக்கதாக அமைந்துள்ளதுடன், குறிப்பிட்ட தோட்டத்தில் உள்ள சிறுவர்களின் முன்பள்ளி கல்விக்கு ஏற்படுத்தப்பட்ட அசௌகரியம் தொடர்பாக சம்பந்தப்பட்டவர்கள் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதல்; இரு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் குறித்து ஐ.நா கவலை!
செய்திகள்

தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதல்; இரு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் குறித்து ஐ.நா கவலை!

September 12, 2026
ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகள் அல்ல அவர்கள் தீவிரவாதிகள் !
செய்திகள்

ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகள் அல்ல அவர்கள் தீவிரவாதிகள் !

September 12, 2026
கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்
செய்திகள்

கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்

September 12, 2026
மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான மொட்டு கட்சிக் கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பி. பங்கேற்பு!
செய்திகள்

மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான மொட்டு கட்சிக் கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பி. பங்கேற்பு!

September 12, 2026
நல்லூர் தேர் திருவிழாவில் தாலிக்கொடி அறுத்த பெண் கைது!
செய்திகள்

நல்லூர் தேர் திருவிழாவில் தாலிக்கொடி அறுத்த பெண் கைது!

September 12, 2026
விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் புதிய செயலாளராக ரோஷனி திசாநாயக நியமனம்!
செய்திகள்

விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் புதிய செயலாளராக ரோஷனி திசாநாயக நியமனம்!

September 12, 2026
Next Post
அமெரிக்கா – ஈரான் அமைதி ஒப்பந்தத்தின் இறுதி உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் அறிவிப்பு!

அமெரிக்கா – ஈரான் அமைதி ஒப்பந்தத்தின் இறுதி உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் அறிவிப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.