Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
என்னிடம் ஒப்படைத்திருந்தால் பி.பாலசந்திரனை நிச்சயம் காப்பாற்றியிருப்பேன்; டக்ளஸ் உருக்கம்

என்னிடம் ஒப்படைத்திருந்தால் பி.பாலசந்திரனை நிச்சயம் காப்பாற்றியிருப்பேன்; டக்ளஸ் உருக்கம்

3 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

இறுதிப் போரின் போது, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வே. பிரபாகரனின் இளைய மகன் பாலசந்திரன் தன்னிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தால், அவரைத் தான் நிச்சயமாக உயிருடன் பாதுகாத்திருப்பேன் என்று முன்னாள் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இறுதிப் போர் முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து, இலங்கை இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த பாலசந்திரன், துப்பாக்கியால் சுடப்பட்டுப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. இச்சம்பவம் குறித்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேலும் கருத்துத் தெரிவிக்கையில், “இறுதிப் போர் முடிவுக்கு வந்த பின்னர், பாலசந்திரன் என்னிடம் கொண்டு வந்து சேர்க்கப்பட்டிருந்தால், அவரை நான் மிகவும் பாதுகாப்பான முறையில் உயிரோடு வைத்திருந்திருப்பேன். அவர் பிரபாகரனின் மகன் என்பதற்காக மட்டுமல்ல, ஒரு மனிதநேய அடிப்படையிலேயே நான் இந்த முடிவை எடுத்திருப்பேன். ஏனெனில், போர் மௌனித்த பிறகு அவரைத் தாண்டி எந்தவொரு அச்சுறுத்தலும் ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை” என்று உருக்கமாகத் தெரிவித்தார்.

விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்த பலரைத் தான் ஏற்கனவே பாதுகாப்பாக வைத்திருந்து, பின்னர் அவர்களை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்ததாகக் குறிப்பிட்ட அவர், பாலசந்திரனுக்கும் அத்தகையதொரு பாதுகாப்பைத் தம்மால் வழங்கியிருக்க முடியும் என்பதைச் சுட்டிக்காட்டினார்.

பாலசந்திரனின் மரணம் தொடர்பான விவாதங்கள் இன்னமும் நீடித்து வரும் நிலையில், முன்னாள் அமைச்சரின் இந்தக் கருத்து அரசியல் வட்டாரங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதல்; இரு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் குறித்து ஐ.நா கவலை!
செய்திகள்

தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதல்; இரு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் குறித்து ஐ.நா கவலை!

September 12, 2026
ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகள் அல்ல அவர்கள் தீவிரவாதிகள் !
செய்திகள்

ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகள் அல்ல அவர்கள் தீவிரவாதிகள் !

September 12, 2026
கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்
செய்திகள்

கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்

September 12, 2026
மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான மொட்டு கட்சிக் கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பி. பங்கேற்பு!
செய்திகள்

மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான மொட்டு கட்சிக் கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பி. பங்கேற்பு!

September 12, 2026
நல்லூர் தேர் திருவிழாவில் தாலிக்கொடி அறுத்த பெண் கைது!
செய்திகள்

நல்லூர் தேர் திருவிழாவில் தாலிக்கொடி அறுத்த பெண் கைது!

September 12, 2026
விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் புதிய செயலாளராக ரோஷனி திசாநாயக நியமனம்!
செய்திகள்

விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் புதிய செயலாளராக ரோஷனி திசாநாயக நியமனம்!

September 12, 2026
Next Post
பல்கலைக்கழக மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு 5,000 ரூபா கொடுப்பனவு

பல்கலைக்கழக மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு 5,000 ரூபா கொடுப்பனவு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு