Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பில் புதிய லயன்ஸ் கழகத்தின் உத்தியோகபூர்வ அங்குரார்ப்பண நிகழ்வு

மட்டக்களப்பில் புதிய லயன்ஸ் கழகத்தின் உத்தியோகபூர்வ அங்குரார்ப்பண நிகழ்வு

3 months ago
in செய்திகள், மட்டு செய்திகள்

சர்வதேச லயன்ஸ் கழகங்களின் 306டி 10 மாவட்டத்தின் கீழ், “மட்டக்களப்பு பாடுமீன் லயன்ஸ் கழகத்தின்” பெருமைமிகு ஏற்பாட்டில், ‘மட்டக்களப்பு ஸ்பெக்ட்ரம் லயன்ஸ் கழகம் – மனிதநேயத்திற்காக’ என்ற புதிய லயன்ஸ் கழகத்தின் உத்தியோகபூர்வ அங்குரார்ப்பண விழா நேற்று மிகச் சிறப்பாக நடைபெற்றது.

பாசிக்குடாவில் அமைந்துள்ள பிரபல அமயா ஹோட்டலில் நேற்று வெகுவிமர்சையாக நடைபெற்றது.
இவ்விழாவிற்கு முதன்மை விருந்தினராக லயன்ஸ் மாவட்ட ஆளுநர் லயன் கே. லோகேந்திரன் PMJF, PMAF அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார். அவருடன் இணைந்து மாவட்டத்தின் முதல் பெண்மணி லயன் லோஜிதா லோகேந்திரன் MJF அவர்களும் கௌரவ விருந்தினராக கலந்து சிறப்பித்தனர்.

“மனிதநேயத்திற்காக” என்ற உன்னத மகுடவாசகத்துடன் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த புதிய கழகத்தின் அறிமுக விழாவில், புதிய உறுப்பினர்கள் மாவட்ட ஆளுநரால் உத்தியோகபூர்வமாக கழகத்தினுள் இணைத்துக் கொள்ளப்பட்டதுடன், புதிய நிருவாகிகளுக்கான பதவியேற்பு சத்தியப்பிரமாணமும் நடைபெற்றது.

இதன்போது புதிய இந்த மட்டக்களப்பு ஸ்பெக்ட்ரம் லயன்ஸ் கழகம் – மனிதநேயத்திற்காக என்னும் கழகத்தின் தலைவராக ஞானசேகரம் நவீகரன் தெரிவுசெய்யப்பட்டிருந்த நிலையில் அவர் வரவேற்கப்பட்டு அவருக்கான பதவி நிலையும் ஆளுனரினால் வழங்கிவைக்கப்பட்டது.

இதன்போது இப்புதிய கழகத்தின் இலச்சினையானது “பன்முகத்தன்மையில் வலிமை, ஒற்றுமையில் சேவை, “ஒன்றாக நாம் சேவை செய்வோம், ஒன்றாக நாம் மாற்றத்தினை ஏற்படுத்துவோம்” ஆகிய உயரிய கோட்பாடுகளைத் தாங்கி, மனிதநேயத்தை உலகிற்கு பறைசாற்றும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதுடன் அது வெளியிட்டும் வைக்கப்பட்டது.

மட்டக்களப்பு பிராந்தியத்தில் பின்தங்கிய மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், கல்வி, சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் மேம்பாட்டிற்கான பல்வேறு சமூக நலத்திட்டங்களை இப்புதிய கழகம் இனிவரும் காலங்களில் முன்னெடுக்கவுள்ளதாக விழாவின் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

இவ்விழாவில் லயன்ஸ் கழகத்தின் உயர் அதிகாரிகள், மாவட்ட நிருவாகிகள், “மட்டக்களப்பு பாடுமீன் லயன்ஸ் கழகத்தின் உறுப்பினர்கள் மற்றும் பல முக்கிய பிரமுகர்கள் எனப் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். விழாவின் நிறைவில் புதிய சங்கத்தின் நிருவாகிகளுக்கு வாழ்த்துகளும் பாராட்டுக்களும் தெரிவிக்கப்பட்டன.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

குறைந்த அழுத்தப் பிரதேசம் தாழமுக்கமாக வலுவடையும் சாத்தியம்!
செய்திகள்

குறைந்த அழுத்தப் பிரதேசம் தாழமுக்கமாக வலுவடையும் சாத்தியம்!

September 21, 2026
மட்டக்களப்பில் சட்டவிரோதமாக T-56 துப்பாக்கி வைத்திருந்தவருக்கு ஆயுள் தண்டனை!
செய்திகள்

மட்டக்களப்பில் சட்டவிரோதமாக T-56 துப்பாக்கி வைத்திருந்தவருக்கு ஆயுள் தண்டனை!

September 21, 2026
உயர் கல்வித் தகுதி பெற்ற இளைஞர்களின் வேலையின்மை; ஆசியாவில் இலங்கை முதலிடம்!
செய்திகள்

உயர் கல்வித் தகுதி பெற்ற இளைஞர்களின் வேலையின்மை; ஆசியாவில் இலங்கை முதலிடம்!

September 21, 2026
அனோஜனின் பெற்றோரை சந்தித்தார் சஜித் – விடுதலைக்கு உதவவும் உறுதி!
செய்திகள்

அனோஜனின் பெற்றோரை சந்தித்தார் சஜித் – விடுதலைக்கு உதவவும் உறுதி!

September 21, 2026
புற்றுநோயாளிகளுக்கான அத்தியாவசிய தடுப்பூசிக்கு கடும் தட்டுப்பாடு; ஜனாதிபதியிடம் அவசர கோரிக்கை!
செய்திகள்

புற்றுநோயாளிகளுக்கான அத்தியாவசிய தடுப்பூசிக்கு கடும் தட்டுப்பாடு; ஜனாதிபதியிடம் அவசர கோரிக்கை!

September 21, 2026
சவூதியில் மரண தண்டனை பெற்ற அனோஜனின் குடும்பத்தினர் சவூதி தூதரகத்துக்கு விஜயம்!
செய்திகள்

சவூதியில் மரண தண்டனை பெற்ற அனோஜனின் குடும்பத்தினர் சவூதி தூதரகத்துக்கு விஜயம்!

September 21, 2026
Next Post
வட்டவளையில் முச்சக்கரவண்டி 75 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்து; சாரதி காயம்!

வட்டவளையில் முச்சக்கரவண்டி 75 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்து; சாரதி காயம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு