வெளிநாட்டில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி ஒருவரிடமிருந்து 49 இலட்சத்து 90 ஆயிரம் ரூபாயை மோசடி செய்த குற்றச்சாட்டில், இலங்கை குடியுரிமை பெற்ற இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில், கிளிநொச்சி விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்தனர். அதன் விளைவாக, கிளிநொச்சி பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய சந்தேகநபர் நேற்று கைது செய்யப்பட்டார்.

குறித்த நிதி மோசடி சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.








