Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் விற்றதாக இருவர் கைது!

பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் விற்றதாக இருவர் கைது!

2 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து ஐஸ் போதைப்பொருள் விற்பனை செய்து வந்ததாகக் கூறப்படும் இருவர், பொதுமக்களிடமிருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று (16) அல்லைப்பிட்டி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்டுள்ளதாக ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையம் தெரிவித்துள்ளது.

சந்தேகநபர்களிடமிருந்து 5.2 கிராம் மற்றும் 5 கிராம் அளவிலான ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் 45 மற்றும் 49 வயதுடைய அல்லைப்பிட்டி பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும், அவர்கள் ஊர்காவற்றுறை குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

பொலிஸாரின் தகவலின்படி, குறித்த இருவரும் மாடு திருட்டு, களவு மற்றும் போதைப்பொருள் விற்பனை உள்ளிட்ட பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்ததாகவும், குறிப்பாக பாடசாலை மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்பனை செய்து வருவதாக பொதுமக்களிடமிருந்து தொடர்ச்சியாக தகவல்கள் கிடைத்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியின் வழிகாட்டுதலின் கீழ் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது, அல்லைப்பிட்டி சந்தி மற்றும் தேவாலயப் பகுதிகளில் இரு சந்தேகநபர்களும் தனித்தனியாக கைது செய்யப்பட்டனர்.

சந்தேகநபர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், அவர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும், தீவகப் பகுதியில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடுவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ள பொலிஸார், அதுபோன்ற செயல்பாடுகள் தொடர்பான தகவல்களை அச்சமின்றி வழங்குமாறும் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதில் மாற்றம்; வௌியானது வர்த்தமானி!
செய்திகள்

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதில் மாற்றம்; வௌியானது வர்த்தமானி!

August 7, 2026
நாட்டில் தொடரும் சிறைக்கலவரங்கள்; முப்படையினருக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு!
செய்திகள்

நாட்டில் தொடரும் சிறைக்கலவரங்கள்; முப்படையினருக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு!

August 7, 2026
மட்டக்களப்பில் புழுக்கள் மற்றும் பூஞ்சணம் பிடித்த பிஸ்கட்டுகள் பறிமுதல்; ரூ.46,000 அபராதம்!
செய்திகள்

மட்டக்களப்பில் புழுக்கள் மற்றும் பூஞ்சணம் பிடித்த பிஸ்கட்டுகள் பறிமுதல்; ரூ.46,000 அபராதம்!

August 7, 2026
மட்டக்களப்பு சிறைச்சாலையை சுற்றி பலத்த பாதுகாப்பு!
செய்திகள்

மட்டக்களப்பு சிறைச்சாலையை சுற்றி பலத்த பாதுகாப்பு!

August 7, 2026
நிர்ணய விலையை மீறி அரிசி விற்பனை; வவுனியா வர்த்தகருக்கு ரூ.1 இலட்சம் அபராதம்!
செய்திகள்

நிர்ணய விலையை மீறி அரிசி விற்பனை; வவுனியா வர்த்தகருக்கு ரூ.1 இலட்சம் அபராதம்!

August 7, 2026
அரச அதிகாரிகளின் சொத்து விபரங்களுக்கு வரையறை
செய்திகள்

அரச அதிகாரிகளின் சொத்து விபரங்களுக்கு வரையறை

August 7, 2026
Next Post
கண்டி – தெல்தெனியாவில் காரிலிருந்து பெண் சடலம் மீட்பு; விசாரணை ஆரம்பம்!

கண்டி - தெல்தெனியாவில் காரிலிருந்து பெண் சடலம் மீட்பு; விசாரணை ஆரம்பம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.