Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கிழக்கு மாகாண நிர்வாகக் குழப்பம் – உத்தியோகத்தர்கள் கடுமையாக பாதிப்பு; இம்ரான் எம்.பி!

கிழக்கு மாகாண நிர்வாகக் குழப்பம் – உத்தியோகத்தர்கள் கடுமையாக பாதிப்பு; இம்ரான் எம்.பி!

3 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

கிழக்கு மாகாண பொதுச் சேவை நிர்வாகத்தின் பலவீனம் காரணமாக முகாமைத்துவ உத்தியோகத்தர் சேவையின் விசேட தரத்துக்கான போட்டிப் பரீட்சையில் வெற்றி பெற்ற உத்தியோகத்தர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு இன்று (17) கருத்து தெரிவித்த அவர், கடந்த வாரம் நடைபெற்ற நேர்முகப் பரீட்சையின் போது சில உத்தியோகத்தர்களின் முடிவுகள் தடைதாண்டல் பரீட்சைப் பெறுபேறு சமர்ப்பிக்கப்படாத காரணத்தால் இடைநிறுத்தப்பட்டதாக குறிப்பிட்டார்.

கிழக்கு மாகாண முகாமைத்துவ உத்தியோகத்தர் சேவையின் ஆட்சேர்ப்புத் திட்டத்தின்படி வருடத்திற்கு இருமுறை தடைதாண்டல் பரீட்சை நடத்தப்பட வேண்டும் எனவும், ஆனால் மாகாண பொதுச் சேவை ஆணைக்குழு அந்த பரீட்சையை உரிய காலத்தில் நடத்தத் தவறியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதற்கிடையில், பரீட்சை நடத்தப்படாத நிலையிலேயே அதன் பெறுபேறுகளை கோருவது முரண்பாடான நடவடிக்கை எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.

இந்த நிலைமை காரணமாக பாதிக்கப்படுவது உயரதிகாரிகள் அல்ல, கீழ்மட்ட உத்தியோகத்தர்களே எனவும் அவர் தெரிவித்தார்.

மேலும், கிழக்கு மாகாண நிர்வாகம் தற்போதைய காலத்தில் கடுமையாக பலவீனமடைந்துள்ளதாகவும், இதனால் பொதுமக்கள் தங்களது நிர்வாக நடவடிக்கைகளை காலத்துக்கு ஏற்ப நிறைவேற்ற முடியாமல் சிரமப்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

இந்த நிலைமை, அரசாங்கம் வாக்குறுதியளித்த “சிஸ்டம் சேஞ்ச்” என்பதற்கு எதிரானதாகும் எனவும், மாகாண நிர்வாகம் திறமையற்ற முறையில் செயல்படுவதை இது வெளிப்படுத்துவதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் மேலும் தெரிவித்தார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

ஈஸ்டர் தாக்குதல் வழக்குத் தீர்ப்பை கத்தோலிக்க திருச்சபை வரவேற்பு!
செய்திகள்

ஈஸ்டர் தாக்குதல் வழக்குத் தீர்ப்பை கத்தோலிக்க திருச்சபை வரவேற்பு!

September 23, 2026
ஆடை சக்கரத்தில் சிக்கி மோட்டார் சைக்கிள் விபத்து; பல்கலைக்கழக மாணவி உயிரிழப்பு!
செய்திகள்

ஆடை சக்கரத்தில் சிக்கி மோட்டார் சைக்கிள் விபத்து; பல்கலைக்கழக மாணவி உயிரிழப்பு!

September 23, 2026
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்திற்குப் பதிலாக புதிய சட்டமூலம் வர்த்தமானியில் வெளியீடு!
செய்திகள்

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்திற்குப் பதிலாக புதிய சட்டமூலம் வர்த்தமானியில் வெளியீடு!

September 23, 2026
மட்டக்களப்பு மாநகரசபை – காத்தான்குடி நகரசபை இடையே ஏற்பட்ட முறுகல் காத்தான்குடி பொலிஸாரின் தலையீட்டால் முடிவுக்கு வந்தது!
செய்திகள்

மட்டக்களப்பு மாநகரசபை – காத்தான்குடி நகரசபை இடையே ஏற்பட்ட முறுகல் காத்தான்குடி பொலிஸாரின் தலையீட்டால் முடிவுக்கு வந்தது!

September 23, 2026
பிரதமருக்கும் IMF பிரதிநிதிகள் குழுவிற்கும் இடையில் சந்திப்பு!
செய்திகள்

பிரதமருக்கும் IMF பிரதிநிதிகள் குழுவிற்கும் இடையில் சந்திப்பு!

September 23, 2026
ஈரானை முற்றிலும் அழித்துவிடுவதாக ட்ரம்ப் எச்சரிக்கை!
செய்திகள்

ஈரானை முற்றிலும் அழித்துவிடுவதாக ட்ரம்ப் எச்சரிக்கை!

September 23, 2026
Next Post
பூனாவையில் பஸ் மோதி பாடசாலை ஆசிரியை உயிரிழப்பு!

பூனாவையில் பஸ் மோதி பாடசாலை ஆசிரியை உயிரிழப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு