Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
செம்மணி மனிதப் புதைகுழி; 380 எலும்பு எச்சங்களுடன் இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக பதிவு!

செம்மணி மனிதப் புதைகுழி; 380 எலும்பு எச்சங்களுடன் இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக பதிவு!

2 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

யாழ்ப்பாணம் செம்மணி சித்துப்பாத்தி பகுதியில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழியில் இதுவரை சுமார் 380 மனித உடல்களுக்குச் சொந்தமான எலும்பு எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதால், இது இலங்கையில் இதுவரை பதிவான மிகப்பெரிய மனிதப் புதைகுழியாக மாறியுள்ளது.

கடந்த 2025 மே 15ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட அகழ்வாராய்ச்சிப் பணிகள், 2026 ஜூன் 17ஆம் திகதி வரையான காலப்பகுதியில் மூன்று கட்டங்களாக 81 நாட்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் 362 எலும்புக்கூடுகள் முழுமையாகத் தோண்டி எடுக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக அகழ்வுப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

அண்மையில் ஐ.நா. சித்திரவதைக்கு எதிரான குழு (UN CAT) இலங்கைக்கு மேற்கொண்ட உத்தியோகபூர்வ கண்காணிப்பு விஜயத்தின் பின்னணியிலேயே, மேலும் 14 மனித எலும்பு எச்சங்கள் புதிதாக கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதைகுழியில் பச்சிளம் குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்குச் சொந்தமான எச்சங்கள் உட்பட பல்வேறு வயதினரின் உடல்பாகங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதுடன், பால் போத்தல்கள், பொம்மைகள், பாடசாலை பைகள், காலணிகள் மற்றும் நாணயங்கள் உள்ளிட்ட சுமார் 120 தனிப்பட்ட பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன.

நீதிமன்ற உத்தரவின் கீழ், தடயவியல் தொல்பொருள் ஆய்வாளர் பேராசிரியர் ராஜ் சோமதேவ மற்றும் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் சட்ட மருத்துவ அதிகாரி செல்லையா பிரணவன் ஆகியோரின் வழிகாட்டுதலில் அகழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதேவேளை, இலங்கையில் இதுவரை கண்டறியப்பட்டுள்ள 17 மனிதப் புதைகுழிகளில் செம்மணி புதைகுழியே தற்போது முதலிடத்தில் உள்ளதாகவும், இதற்கு அடுத்ததாக மன்னார் சத்தொச புதைகுழி 376 உடல்களுடன் இரண்டாம் இடத்தில் உள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.

இந்த அனைத்து மனிதப் புதைகுழிகளும் அரசாங்கத்தின் திட்டமிட்ட விசாரணைகளின் மூலம் அல்லாது தற்செயலாகவே கண்டறியப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewspoliticalnewssrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

நாடளாவிய ரீதியில் குற்றச்செயல்களில் ஈடுபட்ட 508 பேர் கைது!
செய்திகள்

நாடளாவிய ரீதியில் குற்றச்செயல்களில் ஈடுபட்ட 508 பேர் கைது!

August 7, 2026
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதில் மாற்றம்; வௌியானது வர்த்தமானி!
செய்திகள்

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதில் மாற்றம்; வௌியானது வர்த்தமானி!

August 7, 2026
நாட்டில் தொடரும் சிறைக்கலவரங்கள்; முப்படையினருக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு!
செய்திகள்

நாட்டில் தொடரும் சிறைக்கலவரங்கள்; முப்படையினருக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு!

August 7, 2026
மட்டக்களப்பில் புழுக்கள் மற்றும் பூஞ்சணம் பிடித்த பிஸ்கட்டுகள் பறிமுதல்; ரூ.46,000 அபராதம்!
செய்திகள்

மட்டக்களப்பில் புழுக்கள் மற்றும் பூஞ்சணம் பிடித்த பிஸ்கட்டுகள் பறிமுதல்; ரூ.46,000 அபராதம்!

August 7, 2026
மட்டக்களப்பு சிறைச்சாலையை சுற்றி பலத்த பாதுகாப்பு!
செய்திகள்

மட்டக்களப்பு சிறைச்சாலையை சுற்றி பலத்த பாதுகாப்பு!

August 7, 2026
நிர்ணய விலையை மீறி அரிசி விற்பனை; வவுனியா வர்த்தகருக்கு ரூ.1 இலட்சம் அபராதம்!
செய்திகள்

நிர்ணய விலையை மீறி அரிசி விற்பனை; வவுனியா வர்த்தகருக்கு ரூ.1 இலட்சம் அபராதம்!

August 7, 2026
Next Post
மகனின் மரணச்சான்றிதழும் கிடைக்கவில்லை; உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நீதி கோரி மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்

மகனின் மரணச்சான்றிதழும் கிடைக்கவில்லை; உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நீதி கோரி மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு