Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
அமெரிக்காவில் பாலியல் சேவை பெற காத்திருந்த இலங்கை பிக்கு கைது

அமெரிக்காவில் பாலியல் சேவை பெற காத்திருந்த இலங்கை பிக்கு கைது

2 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

டப்ட்ஸ் பல்கலைக்கழகத்தின் பௌத்த மதகுருவான இலங்கையை சேர்ந்த வினீத மஹாயயே, பாலியல் செயல்களுக்காகப் பணம் வழங்க முயன்றதாகக் கூறி, போஸ்டன் பொலிஸாரின் மனிதக்கடத்தல் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, தனது பல்கலைக்கழக மதகுரு பதவியிலிருந்து திங்கட்கிழமை (15) இராஜினாமா செய்துள்ளார்.

32 வயதான மஹாயயே, இந்த விவகாரம் தொடர்பாக தான் குற்றமற்றவர் என்று நீதிமன்றத்தில் வாதிட்டுள்ளார். இவர் மீது ‘பாலியல் தொழிலுக்காகப் பணம் செலுத்தியது’ (sex for a fee) என்ற குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு விசாரணை செப்டம்பர் 2 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

போஸ்டன் பகுதியில் நடைபெறவுள்ள உலகக் கிண்ணக் கால்பந்து போட்டிகளையொட்டி, மனிதக் கடத்தல்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில் ‘ஆபரேஷன் ரெட் கார்ட்’ (Operation Red Card) என்ற பெயரில் பொலிஸார் ஒரு அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டனர். இதன்போது, பாலியல் கடத்தல்காரர்கள் பயன்படுத்தும் இணையதளம் ஒன்றில், பொலிஸார் போலி விளம்பரங்களை வெளியிட்டனர். அந்த விளம்பரங்களுக்குப் பதிலளித்து, பாலியல் செயல்களுக்காக 125 டொலர் முதல் 400 டொலர் வரை பணம் செலுத்த முன்வந்த ஐவரில், மஹாயயேவும் ஒருவர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் போஸ்டன் டவுன்டவுனில் உள்ள ‘மொக்ஸி’ (Moxy) ஹோட்டலில் வைத்துப் பிடிக்கப்பட்டனர். அவர்களிடம் தாம் தருவதாகக் கூறிய அதே தொகை பணமாக இருந்ததை பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இது குறித்து டப்ட்ஸ் பல்கலைக்கழகத்தின் ஊடகத் தொடர்பாடல் பிரிவின் நிறைவேற்றுப் பணிப்பாளர் பேட்ரிக் கொலின்ஸ் கூறுகையில், ” வினீத மஹாயயே தனது பதவியை உடனடியாக இராஜினாமா செய்வதாக எமக்கு அறிவித்துள்ளார்” என்று தெரிவித்தார். மேலும், பல்கலைக்கழக மதகுரு ரெவரெண்ட் எலிஸ் நெல்சன் விங்கர், மஹாயயேவின் இராஜினாமாவை உறுதிப்படுத்தியதுடன், புதிய மதகுருவைத் தேடும் பணிகள் இந்த கோடையில் தொடங்கப்படும் என்றும், பௌத்த மதகுருவின் அனைத்துச் செயற்பாடுகளும் வழமைபோலத் தொடரும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் குறித்து கருத்துத் தெரிவிக்க மஹாயயேவின் சட்டத்தரணி கேத்தரின் கூன்ட்ஸ் உடனடியாக முன்வரவில்லை. செவ்வாய்க்கிழமை நிலவரப்படி, டப்ட்ஸ் பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் இருந்து மஹாயயேவின் விபரங்கள் நீக்கப்பட்டுள்ளன.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

நாடளாவிய ரீதியில் குற்றச்செயல்களில் ஈடுபட்ட 508 பேர் கைது!
செய்திகள்

நாடளாவிய ரீதியில் குற்றச்செயல்களில் ஈடுபட்ட 508 பேர் கைது!

August 7, 2026
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதில் மாற்றம்; வௌியானது வர்த்தமானி!
செய்திகள்

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதில் மாற்றம்; வௌியானது வர்த்தமானி!

August 7, 2026
நாட்டில் தொடரும் சிறைக்கலவரங்கள்; முப்படையினருக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு!
செய்திகள்

நாட்டில் தொடரும் சிறைக்கலவரங்கள்; முப்படையினருக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு!

August 7, 2026
மட்டக்களப்பில் புழுக்கள் மற்றும் பூஞ்சணம் பிடித்த பிஸ்கட்டுகள் பறிமுதல்; ரூ.46,000 அபராதம்!
செய்திகள்

மட்டக்களப்பில் புழுக்கள் மற்றும் பூஞ்சணம் பிடித்த பிஸ்கட்டுகள் பறிமுதல்; ரூ.46,000 அபராதம்!

August 7, 2026
மட்டக்களப்பு சிறைச்சாலையை சுற்றி பலத்த பாதுகாப்பு!
செய்திகள்

மட்டக்களப்பு சிறைச்சாலையை சுற்றி பலத்த பாதுகாப்பு!

August 7, 2026
நிர்ணய விலையை மீறி அரிசி விற்பனை; வவுனியா வர்த்தகருக்கு ரூ.1 இலட்சம் அபராதம்!
செய்திகள்

நிர்ணய விலையை மீறி அரிசி விற்பனை; வவுனியா வர்த்தகருக்கு ரூ.1 இலட்சம் அபராதம்!

August 7, 2026
Next Post
இன்றுமுதல் சதொசவில் குறைக்கப்பட்டுள்ள பொருட்களின் விலைகள்

இன்றுமுதல் சதொசவில் குறைக்கப்பட்டுள்ள பொருட்களின் விலைகள்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.