மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களில் பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு குறித்த சிவப்பு எச்சரிக்கையினை வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ளது.
இந்த எச்சரிக்கை அறிவித்தல் நாளை (19) பிற்பகல் 1 மணி வரை செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்கரைக்கு அப்பால் உள்ள கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 முதல் 60 கிலோமீட்டர் வரை அதிகரிக்கக்கூடும்.
காற்றின் வேகம் அதிகரிப்பதன் காரணமாக, இக்கடற்பரப்புகள் அவ்வப்போது மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படலாம்.
எனவே, கடற்படை மற்றும் மீனவச் சமூகங்கள் இவ்விடயம் குறித்து மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.








