லங்கா உப்பு நிறுவனத்தின் தற்போதைய பொது முகாமையாளர் ரத்நாயக்க முதியன்சலாகே குணரத்ன, இலஞ்ச ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
முறையான கொள்முதல் செயன்முறையின்றி, மீள் கொள்வனவு ஒன்றின் மூலம் ஹம்பாந்தோட்டை உப்பு நிறுவனத்துக்காக பொதியிடல் உறைகள் பெற்றுக்கொள்ளப்பட்டதன் காரணமாக அரசாங்கத்திற்கு சுமார் ஒரு கோடியே நாற்பத்து மூன்று இலட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன் மூலம் பிரதான விநியோகஸ்தர் நிறுவனம் அநியாயமான முறையில் இலாபம் ஈட்டுவதற்கு வாய்ப்பளிக்கப்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.








