மாட்டின் கொம்புகளில் விவசாயம் மற்றும் காணி அமைச்சர் லால் காந்த மற்றும் பிரதி அமைச்சர் ஆகியோரின் புகைப்படங்களை கொழுவி இந்த ஆர்ப்பாட்டத்தை விவசாயிகள் நடாத்தியிருந்தனர்.
தங்களின் நெல் உற்பத்திப் பொருட்களை விற்க முடியாமல், பொருத்தமான விலையை அரசாங்கம் வழங்காமல் இருக்கும் நிலையில் பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தியுள்ள அரசாங்கத்தை நோக்கி எருமைகளுடன் ஒப்பிட்டு இந்தப் போராட்டம் நடைபெற்றதும் குறிப்பிடத்தக்கது.
அம்பாறை மாவட்டத்தின் பிபிலை பிரதேசத்தை சேர்ந்த ஏழை விவசாயிகளே இந்த ஆர்ப்பாட்டத்தை நடாத்தியதாக சமூக வலைத்தள செய்திகள் செய்திகள் தெரிவிக்கின்றன.








