Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கட்டுநாயக்க விமான நிலையத்தில் ரூ. 37 கோடி மதிப்புள்ள ஹசீஸ் போதைப்பொருளுடன் வெளிநாட்டு மாணவர் கைது!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் ரூ. 37 கோடி மதிப்புள்ள ஹசீஸ் போதைப்பொருளுடன் வெளிநாட்டு மாணவர் கைது!

3 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

ரூபாய் 37 கோடியே 70 இலட்சம் பெறுமதியான ஹசீஸ் (Hashish) போதைப்பொருள் தொகையுடன் வெளிநாட்டு நபர் ஒருவர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று (19) நள்ளிரவு, பணம் செலுத்தி பயன்படுத்தக்கூடிய “கோல்ட் ரூட்” (Gold Route) சிறப்பு பயணிகள் சேவையின் ஊடாக நாட்டிற்குள் நுழைய முயன்றபோது இந்த கைது இடம்பெற்றதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர் டொமினிக்கன் குடியரசைச் சேர்ந்த 23 வயதுடைய பல்கலைக்கழக மாணவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் கனடாவிலிருந்து டுபாய் வழியாக எமிரேட்ஸ் விமான சேவையின் EK-648 விமானத்தில் நேற்று இரவு 11.15 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்திருந்தார்.

சந்தேகநபர் கொண்டு வந்த இரண்டு பயணப்பைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 146 பொதிகளில் மொத்தமாக 37 கிலோகிராம் 639 கிராம் ஹசீஸ் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

விமான நிலைய வரலாற்றில் இவ்வளவு அதிக மதிப்புடைய ஹசீஸ் போதைப்பொருள் தொகை கைப்பற்றப்பட்ட முதல் சம்பவம் இதுவாகும் என அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். மேலும், 206 அமெரிக்க டொலர் கட்டணம் செலுத்தி “கோல்ட் ரூட்” சேவையைப் பயன்படுத்தி போதைப்பொருள் கடத்த முயற்சிக்கப்பட்ட முதல் நிகழ்வாகவும் இது பதிவாகியுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளுக்காக சந்தேகநபரும் கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் தொகையும் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

வைத்தியர் சுகுணனுக்கு எதிரான சமூக வலைத்தளப் பதிவுகள்; அர்ச்சுனா உள்ளிட்ட 6 நபர்களுக்கு வழக்கு!
செய்திகள்

வைத்தியர் சுகுணனுக்கு எதிரான சமூக வலைத்தளப் பதிவுகள்; அர்ச்சுனா உள்ளிட்ட 6 நபர்களுக்கு வழக்கு!

September 22, 2026
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு; 24 பிரதிவாதிகளில் 15 பேர் குற்றவாளிகள்; 9 பேர் விடுதலை!
செய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு; 24 பிரதிவாதிகளில் 15 பேர் குற்றவாளிகள்; 9 பேர் விடுதலை!

September 22, 2026
சவூதியில் தண்டனை எதிர்கொள்ளும் சிவராசா அனோஜனின் குடும்பத்தினரை சந்தித்த சீலரத்ன தேரர்!
செய்திகள்

சவூதியில் தண்டனை எதிர்கொள்ளும் சிவராசா அனோஜனின் குடும்பத்தினரை சந்தித்த சீலரத்ன தேரர்!

September 22, 2026
சட்டவிரோத பீடி இலைகள் கடற்படையினரால் மீட்பு!
செய்திகள்

சட்டவிரோத பீடி இலைகள் கடற்படையினரால் மீட்பு!

September 22, 2026
மேல் மாகாண சபையின் முன்னாள் சுகாதார அமைச்சர் கைது!
செய்திகள்

மேல் மாகாண சபையின் முன்னாள் சுகாதார அமைச்சர் கைது!

September 22, 2026
தமிழ் தினப் போட்டியில் தேசிய மட்டத்தில் இரண்டாம் இடம் பெற்ற மட்டக்களப்பு மாணவி!
செய்திகள்

தமிழ் தினப் போட்டியில் தேசிய மட்டத்தில் இரண்டாம் இடம் பெற்ற மட்டக்களப்பு மாணவி!

September 22, 2026
Next Post
எரிபொருள் QR முறை நீக்கப்படுமா?; தொடரும் ஆய்வுகள் குறித்து பெற்றோலிய கூட்டுத்தாபனம் விளக்கம்!

எரிபொருள் QR முறை நீக்கப்படுமா?; தொடரும் ஆய்வுகள் குறித்து பெற்றோலிய கூட்டுத்தாபனம் விளக்கம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு