Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சேனாதிராசா ஜெயானந்தமூர்த்தி காலமானார்

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சேனாதிராசா ஜெயானந்தமூர்த்தி காலமானார்

3 months ago
in செய்திகள்

மட்டக்களப்பு மாவட்டத்தின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான சேனாதிராசா ஜெயானந்தமூர்த்தி, உடல்நலக்குறைவு காரணமாக தனது 61ஆவது வயதில் இன்று (21) காலமானார்.

கடந்த இரண்டு வாரங்களாக சுகவீனமுற்ற நிலையில் மட்டக்களப்பு போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், இன்று பிற்பகல் உயிரிழந்ததாக குடும்பத்தினரும் நெருங்கிய வட்டாரங்களும் உறுதிப்படுத்தியுள்ளன.

அரசியல், ஊடகம் மற்றும் சமூக சேவைத் துறைகளில் நீண்டகாலமாக செயற்பட்டு வந்த ஜெயானந்தமூர்த்தி, மட்டக்களப்பு மக்களின் பிரச்சினைகள் மற்றும் உரிமைகள் தொடர்பாக தொடர்ந்து குரல் கொடுத்த அரசியல் பிரமுகராக அறியப்பட்டார். அவரது மறைவு அரசியல் வட்டாரங்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

1965 ஆம் ஆண்டு செப்டம்பர் 16 ஆம் திகதி மட்டக்களப்பில் பிறந்த அவர், தனது தொழில் வாழ்க்கையை ஆசிரியராக ஆரம்பித்ததுடன் பின்னர் ஊடகத் துறையிலும் பணியாற்றினார்.

அதனைத் தொடர்ந்து, 2004 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் சார்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்டு 44,457 விருப்பு வாக்குகளைப் பெற்று நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவானார்.

அந்தத் தேர்தலில் வடகிழக்கிலிருந்து தெரிவான 22 தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவராகவும் அவர் இடம்பிடித்திருந்தார்.

ஜெயானந்தமூர்த்தியின் மறைவு, மட்டக்களப்பு மாவட்டத்திற்கும் தமிழ் அரசியல் அரங்கிற்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பாகப் பார்க்கப்படுகிறது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

மட்டக்களப்பில் சட்டவிரோதமாக T-56 துப்பாக்கி வைத்திருந்தவருக்கு ஆயுள் தண்டனை!
செய்திகள்

மட்டக்களப்பில் சட்டவிரோதமாக T-56 துப்பாக்கி வைத்திருந்தவருக்கு ஆயுள் தண்டனை!

September 21, 2026
உயர் கல்வித் தகுதி பெற்ற இளைஞர்களின் வேலையின்மை; ஆசியாவில் இலங்கை முதலிடம்!
செய்திகள்

உயர் கல்வித் தகுதி பெற்ற இளைஞர்களின் வேலையின்மை; ஆசியாவில் இலங்கை முதலிடம்!

September 21, 2026
அனோஜனின் பெற்றோரை சந்தித்தார் சஜித் – விடுதலைக்கு உதவவும் உறுதி!
செய்திகள்

அனோஜனின் பெற்றோரை சந்தித்தார் சஜித் – விடுதலைக்கு உதவவும் உறுதி!

September 21, 2026
புற்றுநோயாளிகளுக்கான அத்தியாவசிய தடுப்பூசிக்கு கடும் தட்டுப்பாடு; ஜனாதிபதியிடம் அவசர கோரிக்கை!
செய்திகள்

புற்றுநோயாளிகளுக்கான அத்தியாவசிய தடுப்பூசிக்கு கடும் தட்டுப்பாடு; ஜனாதிபதியிடம் அவசர கோரிக்கை!

September 21, 2026
சவூதியில் மரண தண்டனை பெற்ற அனோஜனின் குடும்பத்தினர் சவூதி தூதரகத்துக்கு விஜயம்!
செய்திகள்

சவூதியில் மரண தண்டனை பெற்ற அனோஜனின் குடும்பத்தினர் சவூதி தூதரகத்துக்கு விஜயம்!

September 21, 2026
மன்னார் கடலில் எரிபொருள் இன்றி மிதந்த மீன்பிடிப் படகு; இரு மீனவர்கள் பாதுகாப்பாக மீட்பு
செய்திகள்

மன்னார் கடலில் எரிபொருள் இன்றி மிதந்த மீன்பிடிப் படகு; இரு மீனவர்கள் பாதுகாப்பாக மீட்பு

September 21, 2026
Next Post
யாழ் DCC கூட்ட குழப்பத்திற்கு சந்திரசேகரின் அடியாட்களே காரணம்; கஜேந்திரன்

யாழ் DCC கூட்ட குழப்பத்திற்கு சந்திரசேகரின் அடியாட்களே காரணம்; கஜேந்திரன்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு