Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பெண் வைத்தியரின் மர்ம மரணம்; தேடப்பட்ட காதலன் குடும்பத்துடன் தலைமறைவு!

பெண் வைத்தியரின் மர்ம மரணம்; தேடப்பட்ட காதலன் குடும்பத்துடன் தலைமறைவு!

2 months ago
in செய்திகள்

கண்டி, தெல்தெனிய வைத்தியசாலைக்கு அருகில் காரொன்றில் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட பெண் வைத்தியரின் மரணம் தொடர்பாக தேடப்பட்டு வந்த பிரதான சந்தேகநபர் தலைமறைவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த பெண்ணின் காதலன் எனக் கூறப்படும் குறித்த நபர், தனது மனைவி மற்றும் மூன்று பிள்ளைகளுடன் கண்டி பகுதியில் உள்ள வீட்டை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சந்தேகநபர் ஒளிந்திருப்பதாக கிடைத்த தகவல்களின் அடிப்படையில் பொலிஸார் சுமார் 10 இடங்களில் விசேட சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்ட போதிலும், அவர் தொடர்பான எந்தவொரு தகவலும் இதுவரை கிடைக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

மேலும், சந்தேகநபரின் தாயாரும் சகோதரரும் வசிக்கும் நாரம்மல பகுதியில் உள்ள வீட்டிற்குச் சென்ற பொலிஸார், அவர்களிடமிருந்து வாக்குமூலங்களையும் பதிவு செய்துள்ளனர்.

இதன்போது, சந்தேகநபரின் மூத்த சகோதரர், தனது தம்பி சிறுவயது முதல் பல்வேறு மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு பலரை ஏமாற்றி பணம் மற்றும் பொருட்களை பெற்றுள்ளதாக தெரிவித்ததாக கூறப்படுகிறது.

“அவர் எனது தம்பி என்றாலும், அவரது முகத்தைக் கூட பார்க்க விரும்பவில்லை. பல மோசமான செயல்களில் ஈடுபட்ட வெறுக்கத்தக்க நபர்” என சகோதரர் வாக்குமூலத்தில் குறிப்பிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதேவேளை, நாட்டின் பல பகுதிகளில் பெண்களை ஏமாற்றி பணம் பறித்ததாகவும் அவர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

சந்தேகநபர் தனது தோற்றத்தை மாற்றிக்கொண்டு தலைமறைவாக இருக்கக்கூடும் என நம்பப்படும் நிலையில், அவரைப் பற்றிய தகவல்கள் ஏதேனும் கிடைத்தால் உடனடியாக பொலிஸாருக்கு அறிவிக்குமாறு புலனாய்வு அதிகாரிகள் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

செம்மணி அகழாய்வு 100 நாள் மைல்கல்; மொத்த மனித எலும்புக்கூடுகள் 507 ஆக உயர்வு
செய்திகள்

செம்மணி அகழாய்வு 100 நாள் மைல்கல்; மொத்த மனித எலும்புக்கூடுகள் 507 ஆக உயர்வு

August 7, 2026
பல்லன்சேன சிறைச்சாலை அமைதியின்மை; காயமடைந்த 28 கைதிகள் வெலிக்கடை சிறை வைத்தியசாலைக்கு மாற்றம்!
செய்திகள்

பல்லன்சேன சிறைச்சாலை அமைதியின்மை; காயமடைந்த 28 கைதிகள் வெலிக்கடை சிறை வைத்தியசாலைக்கு மாற்றம்!

August 7, 2026
சிறைச்சாலைச் சம்பவங்கள் குறித்து நீதி அமைச்சரின் விசேட உரை!
செய்திகள்

சிறைச்சாலைச் சம்பவங்கள் குறித்து நீதி அமைச்சரின் விசேட உரை!

August 7, 2026
நாடளாவிய ரீதியில் குற்றச்செயல்களில் ஈடுபட்ட 508 பேர் கைது!
செய்திகள்

நாடளாவிய ரீதியில் குற்றச்செயல்களில் ஈடுபட்ட 508 பேர் கைது!

August 7, 2026
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதில் மாற்றம்; வௌியானது வர்த்தமானி!
செய்திகள்

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதில் மாற்றம்; வௌியானது வர்த்தமானி!

August 7, 2026
நாட்டில் தொடரும் சிறைக்கலவரங்கள்; முப்படையினருக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு!
செய்திகள்

நாட்டில் தொடரும் சிறைக்கலவரங்கள்; முப்படையினருக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு!

August 7, 2026
Next Post
காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சனையை 2 வருடங்களுக்குள் தீர்ப்போம்; நீதி அமைச்சர் உறுதி!

காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சனையை 2 வருடங்களுக்குள் தீர்ப்போம்; நீதி அமைச்சர் உறுதி!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு