பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால பாராளுமன்ற உறுப்பினர் பதவியை வகிப்பதற்குத் தகுதியற்றவர் எனத் தீர்ப்பளிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் நிர்வாகச் செயலாளர் ரேணுக பெரேரா தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுவை பரிசீலித்த பின்னரே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக ‘அத தெரண’ நீதிமன்ற செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
மனுவில், பாராளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் ஆனந்த விஜேபால, ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியாகவும் பணியாற்றி வருவதாகவும், எனவே அரசியலமைப்பு விதிகளின் அடிப்படையில் அவர் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை வகிப்பதற்குத் தகுதியற்றவர் என அறிவிக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.
இந்த மனு விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதையடுத்து, இது தொடர்பான சட்ட நடவடிக்கைகள் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.








