தொல்பொருட்களைத் தேடும் நோக்கில் அகழ்வுப் பணிகளில் ஈடுபட்ட மூன்று நபர்கள் போகஸ்வெவ பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் சேமமடு காட்டுப் பகுதியில் அகழ்வில் ஈடுபட்டிருந்த போது, அகழ்விற்காக பயன்படுத்தப்பட்ட உபகரணங்களுடன் இவ்வாறு கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் 23, 38 மற்றும் 74 வயதுடைய நாச்சாதூவ மற்றும் பூனேவ பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து போகஸ்வெவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.








