Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
6 உலகக் கிண்ண தொடர்களில் கோல் அடித்து ரொனால்டோ வரலாற்று சாதனை!

6 உலகக் கிண்ண தொடர்களில் கோல் அடித்து ரொனால்டோ வரலாற்று சாதனை!

3 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள், விளையாட்டு

போர்ச்சுகல் கால்பந்து அணியின் தலைவரும் நட்சத்திர வீரருமான கிறிஸ்டியானோ ரொனால்டோ, உலகக் கால்பந்து வரலாற்றில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளார்.

2026 பிபா உலகக் கிண்ண கால்பந்து தொடரின் குரூப் கே பிரிவுக்கான லீக் ஆட்டம் அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் நடைபெற்றது. இதில் உஸ்பெகிஸ்தான் அணியை எதிர்கொண்ட போர்ச்சுகல் அணிக்காக ஆட்டத்தின் ஆறாவது நிமிடத்திலேயே ரொனால்டோ கோல் அடித்து 1-0 என்ற முன்னிலையை பெற்றுக்கொடுத்தார்.

குறித்த கோல் விஏஆர் (VAR) தொழில்நுட்பத்தின் மூலம் சரிபார்க்கப்பட்ட பின்னர் உத்தியோகபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டது.

இந்த கோலின் மூலம், ஆறு வெவ்வேறு உலகக் கிண்ணத் தொடர்களில் கோல் அடித்த உலகின் முதல் கால்பந்து வீரர் என்ற வரலாற்றுச் சாதனையை 41 வயதான ரொனால்டோ படைத்துள்ளார்.

இதற்கு முன்னர் 2006, 2010, 2014, 2018 மற்றும் 2022 ஆகிய உலகக் கிண்ணத் தொடர்களில் கோல் அடித்த ஒரே வீரர் என்ற சாதனையை அவர் ஏற்கனவே தக்கவைத்திருந்தார். தற்போது 2026 உலகக் கிண்ணத்திலும் கோல் கணக்கைத் தொடங்கியதன் மூலம், தனது இருபது ஆண்டுகால உலகக் கிண்ணப் பயணத்தில் புதிய அத்தியாயத்தை எழுதியுள்ளார்.

முன்னதாக, கொங்கோ குடியரசு அணிக்கு எதிரான முதல் போட்டியில் போர்ச்சுகல் அணி 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலை பெற்றிருந்ததால், இந்தப் போட்டியில் வெற்றி பெற வேண்டிய அவசியத்துடன் களமிறங்கியது.

அத்தகைய சூழ்நிலையில் போட்டியின் ஆரம்பத்திலேயே ரொனால்டோ அடித்த கோல், போர்ச்சுகல் அணிக்கும் அதன் ஆதரவாளர்களுக்கும் பெரும் உற்சாகத்தை அளித்துள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

ஜனாதிபதியால் மூன்று புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் நியமனம்!
செய்திகள்

ஜனாதிபதியால் மூன்று புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் நியமனம்!

September 23, 2026
திட்டமிட்டு பழிவாங்குகிறார்கள் – மனித உரிமைகள் ஆணைக்குழுவை நாடிய ஆசிரியர்!
செய்திகள்

திட்டமிட்டு பழிவாங்குகிறார்கள் – மனித உரிமைகள் ஆணைக்குழுவை நாடிய ஆசிரியர்!

September 23, 2026
வங்காள விரிகுடாவில் கடும் வானிலை; பலநாள் மீன்பிடி படகுகளுக்கு சிவப்பு எச்சரிக்கை!
செய்திகள்

வங்காள விரிகுடாவில் கடும் வானிலை; பலநாள் மீன்பிடி படகுகளுக்கு சிவப்பு எச்சரிக்கை!

September 23, 2026
ஈஸ்டர் தாக்குதல் வழக்குத் தீர்ப்பை கத்தோலிக்க திருச்சபை வரவேற்பு!
செய்திகள்

ஈஸ்டர் தாக்குதல் வழக்குத் தீர்ப்பை கத்தோலிக்க திருச்சபை வரவேற்பு!

September 23, 2026
ஆடை சக்கரத்தில் சிக்கி மோட்டார் சைக்கிள் விபத்து; பல்கலைக்கழக மாணவி உயிரிழப்பு!
செய்திகள்

ஆடை சக்கரத்தில் சிக்கி மோட்டார் சைக்கிள் விபத்து; பல்கலைக்கழக மாணவி உயிரிழப்பு!

September 23, 2026
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்திற்குப் பதிலாக புதிய சட்டமூலம் வர்த்தமானியில் வெளியீடு!
செய்திகள்

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்திற்குப் பதிலாக புதிய சட்டமூலம் வர்த்தமானியில் வெளியீடு!

September 23, 2026
Next Post
352 மில்லியன் ரூபா பெறுமதியான ஹஷீஷ் போதைப்பொருளுடன் கனேடிய யுவதி கைது!

352 மில்லியன் ரூபா பெறுமதியான ஹஷீஷ் போதைப்பொருளுடன் கனேடிய யுவதி கைது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு