Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சுரேஷ் சலேவின் உயிருக்கு ஆபத்து இல்லை; அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

சுரேஷ் சலேவின் உயிருக்கு ஆபத்து இல்லை; அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

3 months ago
in செய்திகள்

முன்னாள் புலனாய்வுத்துறைத் தலைவர் சுரேஷ் சலே நலமுடன் இருப்பதுடன், அவரது உயிருக்கு எவ்வித ஆபத்தும் இல்லை என அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

அரச தகவல் திணைக்களத்தில் நேற்று (23) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

சுரேஷ் சலே குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்காக விசேட அறை எதுவும் ஒதுக்கப்படவில்லை என்றும், வழக்கமாக பயன்படுத்தப்படும் அறையிலேயே அவர் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

மேலும், அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ள அறையில் இதற்கு முன்னரும் பலர் தங்க வைக்கப்பட்டிருந்ததாகவும், அந்த அறைகள் 2024 செப்டெம்பர் மாதத்திற்குப் பின்னர் புதிதாக அமைக்கப்பட்டவை அல்ல என்றும் அவர் தெரிவித்தார்.

தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் சுரேஷ் சலேவுக்கு உணவு மறுக்கப்படவில்லை என்றும், அவர் தன்னிச்சையாக வாய்வழி உணவை உட்கொள்ள மறுத்துள்ளதே தற்போதைய நிலைமைக்கு காரணம் என்றும் அமைச்சர் கூறினார்.

எனினும், மருத்துவர்களின் கண்காணிப்பில் அவருக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருவதாகவும், அவர் சுயநினைவுடன் இருந்து தனது அன்றாட தனிப்பட்ட தேவைகளைத் தானே மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.

வாய்வழியாகவோ அல்லது மூக்கின் வழியாக செலுத்தப்பட்டுள்ள குழாய் மூலமாகவோ தேவையான உணவு மற்றும் ஊட்டச்சத்துக்கள் வழங்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன், அவரது குடும்பத்தினரால் கொண்டு வரப்படும் உணவுகளும் அவருக்கு வழங்கப்படுவதாகவும், தேவையெனில் கூடுதல் உணவுகளைப் பெற்றுக்கொள்ளும் வசதியும் உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

இதனால், சுரேஷ் சலேவின் உயிருக்கு எவ்வித ஆபத்தும் இல்லை என வலியுறுத்திய அவர், வெளியக ஆர்ப்பாட்டங்கள், ஊடக சந்திப்புகள் அல்லது மதச் சடங்குகள் மூலம் இந்த நிலைமையை மாற்ற முடியாது என்றும் கூறினார்.

மேலும், நாட்டில் இடம்பெற்ற முக்கிய குற்றச்செயல்கள் தொடர்பான விசாரணைகளை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மேற்கொண்டு வருவதால், அந்த விசாரணைகளுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குவது ஒவ்வொரு குடிமகனின் பொறுப்பாகும் என்றும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalpoliticalnewssrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

ஈஸ்டர் தாக்குதல் வழக்குத் தீர்ப்பை கத்தோலிக்க திருச்சபை வரவேற்பு!
செய்திகள்

ஈஸ்டர் தாக்குதல் வழக்குத் தீர்ப்பை கத்தோலிக்க திருச்சபை வரவேற்பு!

September 23, 2026
ஆடை சக்கரத்தில் சிக்கி மோட்டார் சைக்கிள் விபத்து; பல்கலைக்கழக மாணவி உயிரிழப்பு!
செய்திகள்

ஆடை சக்கரத்தில் சிக்கி மோட்டார் சைக்கிள் விபத்து; பல்கலைக்கழக மாணவி உயிரிழப்பு!

September 23, 2026
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்திற்குப் பதிலாக புதிய சட்டமூலம் வர்த்தமானியில் வெளியீடு!
செய்திகள்

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்திற்குப் பதிலாக புதிய சட்டமூலம் வர்த்தமானியில் வெளியீடு!

September 23, 2026
மட்டக்களப்பு மாநகரசபை – காத்தான்குடி நகரசபை இடையே ஏற்பட்ட முறுகல் காத்தான்குடி பொலிஸாரின் தலையீட்டால் முடிவுக்கு வந்தது!
செய்திகள்

மட்டக்களப்பு மாநகரசபை – காத்தான்குடி நகரசபை இடையே ஏற்பட்ட முறுகல் காத்தான்குடி பொலிஸாரின் தலையீட்டால் முடிவுக்கு வந்தது!

September 23, 2026
பிரதமருக்கும் IMF பிரதிநிதிகள் குழுவிற்கும் இடையில் சந்திப்பு!
செய்திகள்

பிரதமருக்கும் IMF பிரதிநிதிகள் குழுவிற்கும் இடையில் சந்திப்பு!

September 23, 2026
ஈரானை முற்றிலும் அழித்துவிடுவதாக ட்ரம்ப் எச்சரிக்கை!
செய்திகள்

ஈரானை முற்றிலும் அழித்துவிடுவதாக ட்ரம்ப் எச்சரிக்கை!

September 23, 2026
Next Post
அறுவை சிகிச்சையின் தந்தையான சுஷ்ருதருக்கு ஸ்காட்லாந்தில் சிலை திறந்துவைப்பு

அறுவை சிகிச்சையின் தந்தையான சுஷ்ருதருக்கு ஸ்காட்லாந்தில் சிலை திறந்துவைப்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு