Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கரைவலை மீன்பிடி முறைமைக்குத் தடை விதிக்கப்படவில்லை: அமைச்சர் சந்திரசேகர்

கரைவலை மீன்பிடி முறைமைக்குத் தடை விதிக்கப்படவில்லை: அமைச்சர் சந்திரசேகர்

5 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

“பாரம்பரிய கரைவலை மீன்பிடி முறைமைக்குத் தடை விதிக்கப்படவில்லை. இதிலுள்ள பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு ஒரு வருட கால அவகாசம் கோரப்பட்டுள்ளது. நாம் கடற்றொழிலாளர்களைக் கைவிடமாட்டோம்” என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (23) உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அமைச்சர் மேலும் கூறியவை வருமாறு:

“கரைவலை மீன்பிடி என்பது ஒரு பாரம்பரிய முறைமையாகும். அந்த முறைமை இலங்கையில் தடை செய்யப்படவில்லை; அது தொடர்ந்து முன்னெடுக்கப்படும். எனினும், உழவு இயந்திரம் உள்ளிட்ட உபகரணங்களைப் பயன்படுத்தி, கடல்வளத்தை அழிக்கும் வகையில் முன்னெடுக்கப்படும் மீன்பிடி நடைமுறைகளே தடை செய்யப்பட்டுள்ளன.

எவ்வித அறிவியல் பூர்வமான ஆய்வுகளும் இன்றி, தமக்குத் தேவையான விதத்தில் கரைவலை மீன்பிடியில் ஈடுபடுவதற்கு கடந்த காலங்களில் துறைசார் அமைச்சர்கள் அனுமதி வழங்கியமையாலேயே கரைவலை மீன்பிடித் தொழிலில் பாரிய பிரச்சினைகள் ஏற்பட்டன.

அப்பிரச்சினையைத் தீர்ப்பதற்காகவே கரைவலை மீன்பிடித் தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றோம். பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

முதலில் நாம் இரு மாதங்கள் அவகாசம் கோரினோம். ஆனால், அந்த கால எல்லை போதாது என்பதால், அறிவியல் பூர்வமான தீர்வை வழங்குவதற்கு ஒரு வருட கால அவகாசம் கோரியிருந்தோம். மீனவர்களும் இதற்குச் சம்மதம் தெரிவித்துள்ளனர்.

கடல் வளங்களை நாசமாக்க இடமளிக்க முடியாது. சட்டவிரோத நடவடிக்கைகளையும் அனுமதிக்க முடியாது. நாம் கடற்றொழிலாளர்களை ஒருபோதும் கைவிடமாட்டோம்.

பாரம்பரியமான முறையில் கரைவலை மீன்பிடியில் ஈடுபடலாம்; அதற்குரிய புதிய முறைமை உருவாக்கப்படும். எனவே, தடை செய்யப்பட்ட உபகரணங்களைப் பயன்படுத்த வேண்டாம்.

நாம் கால அவகாசம் கோரியுள்ள விடயத்தை வைத்து, அரசியல் நடத்தி மீனவர்களைக் குழப்புவதற்கு எதிர்க்கட்சியினர் முற்படக் கூடாது.

அதேவேளை, இந்திய மீனவர் பிரச்சினை என்பது நீண்ட நாள் பிரச்சினையாகும். இப்பிரச்சினையைத் தீர்ப்பதற்குரிய நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக தற்போது எல்லைத் தாண்டல்கள் குறைவடைந்துள்ளன” என்றார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

தென்கிழக்கு வங்கக்கடலில் மீண்டும் தளம்பல் நிலை ஏற்படும் சாத்தியம்
செய்திகள்

தென்கிழக்கு வங்கக்கடலில் மீண்டும் தளம்பல் நிலை ஏற்படும் சாத்தியம்

November 8, 2026
தென்னிந்திய திரைப்பட நடிகை ரோஜா அதிரடி கைது
அரசியல்

தென்னிந்திய திரைப்பட நடிகை ரோஜா அதிரடி கைது

November 8, 2026
ஜனாதிபதியின் வருடாந்த வருமானம் ரூ.30 இலட்சம்; சஜித்துக்கு 909 இலட்சம் கடன்
செய்திகள்

ஜனாதிபதியின் வருடாந்த வருமானம் ரூ.30 இலட்சம்; சஜித்துக்கு 909 இலட்சம் கடன்

November 8, 2026
இலங்கையில் சீமெந்து மூட்டையின் விலை 100 ரூபாவால் அதிகரிப்பு!
செய்திகள்

இலங்கையில் சீமெந்து மூட்டையின் விலை 100 ரூபாவால் அதிகரிப்பு!

November 8, 2026
அரசாங்கத்திற்கு பெட்ரோலால் 71 ரூபாயும் டீசலால் 53 ரூபாயும் நட்டம் ஏற்படுகிறது; பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர்
செய்திகள்

அரசாங்கத்திற்கு பெட்ரோலால் 71 ரூபாயும் டீசலால் 53 ரூபாயும் நட்டம் ஏற்படுகிறது; பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர்

November 8, 2026
தாய்லாந்தில் 10,000 இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பு; ஆட்சேர்ப்புக்கு அனுமதி!
செய்திகள்

தாய்லாந்தில் 10,000 இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பு; ஆட்சேர்ப்புக்கு அனுமதி!

November 8, 2026
Next Post
மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த தவறும் அதிபர்களுக்கு எதிராக நடவடிக்கை

மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த தவறும் அதிபர்களுக்கு எதிராக நடவடிக்கை

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு