Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வாகாரையில் விழிப்புணர்வு நடைபவனியும் போசாக்கு உணவு கண்காட்சியும்

வாகாரையில் விழிப்புணர்வு நடைபவனியும் போசாக்கு உணவு கண்காட்சியும்

3 months ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

தேசிய போஷாக்கு மாதத்தை முன்னிட்டு வாகரை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் மற்றும் வேர்ல்ட் விஷன் நிறுவனம் என்பன இணைந்து ஏற்பாட்டு செய்த விழிப்புணர்வு நடைபவனியும் போசாக்கு உணவு கண்காட்சியும் இன்று (25) வாகரையில் நடைபெற்றது.

” போசாக்கு மிக்க உணவே நலம் தரும்” என்ற தொனிப்பொருளில் விழிப்புணர்வு நடைபவனியானது வாகரை பொலிஸ் நிலையத்திற்கு அருகாமையில் ஆரம்பிக்கப்பட்டு வாகரை திருமலை வீதி வழியாக ஊர்வலமாக நடந்து வந்து வாகரை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தை சென்றடைந்தது.

இதன்போது நடைபவனியில் கலந்து கொண்டோர் போசாக்கு உணவு தொடர்பான விழிப்பூட்டல் வாசகங்கள் அடங்கிய பதாதைகளை கைகளில் ஏந்தி யிருந்தார்கள்.

நடைபவனியை தொடர்ந்து அதிதிகளால் போசாக்கு மாதம் தொடர்பான விசேட உரை நிகழ்த்தப்பட்டது. தாய்மாருக்கு ஆரோக்கியமான உணவு வழங்கி வைக்கப்பட்டது. சத்துணவுக் கண்காட்சி இடம்பெற்றது. இதில் பிரதேச அன்னையர் ஆதரவு குழுவினரால் தயாரிக்கப்பட்ட சத்துணவுகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.

குறிப்பாக தேன், கிழங்கு வகைகள், பாலப்பழம், வீரப்பழம், கீரைகள் போன்ற வாகரை பிரதேசத்தில் காணப்படுகின்ற பல்வேறு உணவு வகைகளை மையப்படுத்தியதாக இவ் சத்துணவு கண்காட்சி அமைந்திருந்தது.

நிகழ்வில் கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச சபை தவிசாளர் க.தெய்வேந்திரன், வாகரை சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் H.M.T.சசிந்த, மேலதிக சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் P.சோதிராஜ், கோட்டக்கல்விப் பணிப்பாளர் என்.நேசகஜேந்திரன், வேர்ல்ட் விஷன் முகாமையாளர் எ.ரவீந்திரன், வாகரை பிரதேச பாடசாலை அதிபர்கள் பொதுச் சுகாதார பரிசோதகர்கள்.

மருத்துவ மாதுக்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

மட்டக்களப்பில் சிறிய மீன்பிடிப் படகுகளுக்கும் அனுமதிச் சீட்டு நடைமுறை
செய்திகள்

மட்டக்களப்பில் சிறிய மீன்பிடிப் படகுகளுக்கும் அனுமதிச் சீட்டு நடைமுறை

September 23, 2026
மட்டு கண்டியனாறில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை
செய்திகள்

மட்டு கண்டியனாறில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை

September 23, 2026
மட்டக்களப்பில் சொந்த மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தைக்கு 15 வருட சிறை
செய்திகள்

மட்டக்களப்பில் சொந்த மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தைக்கு 15 வருட சிறை

September 23, 2026
டீசலுக்கு பதில் மண்ணெண்ணெய் ; பேருந்துகளுக்கு அதிரடி நடவடிக்கை!
செய்திகள்

டீசலுக்கு பதில் மண்ணெண்ணெய் ; பேருந்துகளுக்கு அதிரடி நடவடிக்கை!

September 23, 2026
இலங்கையின் ஏற்றுமதி வருவாய் 12 பில்லியன் டொலரைக் கடந்தது!
செய்திகள்

இலங்கையின் ஏற்றுமதி வருவாய் 12 பில்லியன் டொலரைக் கடந்தது!

September 23, 2026
நஷ்டத்தில் எரிபொருள் விற்பனை; தீர்வைத் தேடும் அரசாங்கம்! 
செய்திகள்

நஷ்டத்தில் எரிபொருள் விற்பனை; தீர்வைத் தேடும் அரசாங்கம்! 

September 23, 2026
Next Post
சாதாரணதர பரீட்சை பெறு​பேறுகளை மீளாய்வுசெய்வதற்கான அறிவிப்பு

சாதாரணதர பரீட்சை பெறு​பேறுகளை மீளாய்வுசெய்வதற்கான அறிவிப்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு