கொழும்பிலிருந்து பதுளை நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபைக்கு (SLTB) சொந்தமான பேருந்தொன்று தியத்தலாவை ரயில் நிலையத்திற்கு அருகில் சுமார் 20 அடி ஆழமான பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த 42 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காயமடைந்த அனைவரும் உடனடியாக தியத்தலாவை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
காயமடைந்தவர்களில் இருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும், அவர்களில் ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக பதுளை போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் தியத்தலாவை வைத்தியசாலையின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
விபத்துக்கான காரணம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.








