Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
நீதிபதிகளின் ஓய்வு வயது நீட்டிப்புக்கு சர்வதேச சட்ட அமைப்பு எதிர்ப்பு!

நீதிபதிகளின் ஓய்வு வயது நீட்டிப்புக்கு சர்வதேச சட்ட அமைப்பு எதிர்ப்பு!

3 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

உயர் நீதிமன்ற மற்றும் மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை நீட்டிக்கும் நோக்கில் முன்வைக்கப்பட்டுள்ள அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில், ஆசியா மற்றும் பசிபிக் சட்ட சங்கம் (LAWASIA) தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளது.

இந்தத் திடீர் அரசியலமைப்புத் திருத்தம் நீதித்துறையின் சுதந்திரத்தன்மையையும், அதன் மீதான மக்களின் நம்பிக்கையையும் பாதிக்கக்கூடும் என அந்த அமைப்பு எச்சரித்துள்ளது.

தற்போதைய சூழலில் நீதிபதிகளின் ஓய்வு வயதை நீட்டிப்பது, நீதித்துறையில் அரசியல் தலையீடாகப் பார்க்கப்படலாம் என இலங்கை சட்டத்தரிகள் சங்கம் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவுக்கு அனுப்பியிருந்த கடிதத்துக்கும் LAWASIA ஆதரவு தெரிவித்துள்ளது.

அரசியலமைப்பின் 107(5) ஆவது பிரிவின் கீழ் நீதிபதிகளின் ஓய்வு வயது ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், உரிய பொதுக் கலந்தாலோசனைகள் இன்றி இவ்வாறான தற்காலிகத் திருத்தங்களை மேற்கொள்வது பொருத்தமற்றது எனவும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும், நீதித்துறையின் சுதந்திரம் மற்றும் நீதிபதிகளின் பதவிக்காலப் பாதுகாப்பை வலியுறுத்தும் ‘பெய்ஜிங் கோட்பாடுகள்’ அறிக்கையையும் LAWASIA மேற்கோள் காட்டியுள்ளது.

அத்துடன், பொதுநலவாய வழக்கறிஞர்கள் சங்கத்தின் கவலைகளையும் எடுத்துரைத்துள்ள அந்த அமைப்பு, இந்தத் திருத்தத்தை உடனடியாக கைவிடுமாறும், அனைத்து தரப்பினருடனும் முறையான ஆலோசனைகளை நடத்தி சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்துமாறும் இலங்கை அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

சம்மாந்துறை பொலிஸ் பிரிவில் இரு பிள்ளைகளின் தாய் தவறான முடிவு
செய்திகள்

சம்மாந்துறை பொலிஸ் பிரிவில் இரு பிள்ளைகளின் தாய் தவறான முடிவு

September 28, 2026
அருச்சுணா, முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஹரீஸ் உட்பட 6 பேரை மட்டு நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவு
செய்திகள்

அருச்சுணா, முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஹரீஸ் உட்பட 6 பேரை மட்டு நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவு

September 28, 2026
மண்சரிவு அபாயத்தில் வாழ்ந்த 51 குடும்பங்களுக்கு புதிய வீடுகள்!
செய்திகள்

மண்சரிவு அபாயத்தில் வாழ்ந்த 51 குடும்பங்களுக்கு புதிய வீடுகள்!

September 28, 2026
திலீபன் சிலை அகற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்!
காணொளிகள்

திலீபன் சிலை அகற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்!

September 28, 2026
குற்றவாளியாக பெயரிடப்பட்டார் நாமல்!
செய்திகள்

குற்றவாளியாக பெயரிடப்பட்டார் நாமல்!

September 28, 2026
மட்டக்களப்பில் பொலிஸ் காவலில் உயிரிழந்த இளைஞன்- விசாரணையில் முன்னேற்றமில்லை!
செய்திகள்

மட்டக்களப்பில் பொலிஸ் காவலில் உயிரிழந்த இளைஞன்- விசாரணையில் முன்னேற்றமில்லை!

September 28, 2026
Next Post
நீதிமன்ற வழக்குகளில் கைப்பற்றப்பட்ட பாரியளவு போதைப்பொருட்கள் அழிப்பு!

நீதிமன்ற வழக்குகளில் கைப்பற்றப்பட்ட பாரியளவு போதைப்பொருட்கள் அழிப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு