Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பொலிஸாரின் துப்பாக்கியைப் பறித்த நபர் கைது; விசாரணையில் பரபரப்பு தகவல்கள்

பொலிஸாரின் துப்பாக்கியைப் பறித்த நபர் கைது; விசாரணையில் பரபரப்பு தகவல்கள்

3 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திரவந்தியமோடு பகுதியில், பொலிஸாரின் கடமையில் இடையூறு விளைவித்து அவர்களின் துப்பாக்கியைப் பறிக்க முயன்றதாகக் கூறப்படும் 44 வயதுடைய நபர் தொடர்பில் விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

119 அவசர சேவைக்கு கிடைத்த முறைப்பாட்டையடுத்து, சம்பவம் இடம்பெற்ற இரவு கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த சார்ஜன்ட் மற்றும் கான்ஸ்டபிள் ஒருவர் மோட்டார் சைக்கிளில் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர்.

அப்போது, சந்தேகநபர் பொலிஸ் அதிகாரிகளைத் தாக்கி காயப்படுத்தியதுடன், அவர்களிடம் இருந்த துப்பாக்கியையும் பறிக்க முயன்றதாக தெரிவிக்கப்படுகிறது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த மேலதிக பொலிஸார் துப்பாக்கியை மீட்டதுடன், காயமடைந்த பொலிஸார் கல்முனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

சம்பவத்திற்குப் பின்னர் தப்பிச் சென்ற சந்தேகநபர் பின்னர் கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துவரப்பட்டார்.

ஆரம்ப விசாரணைகளின் போது, 2000ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்ததாகவும், 2004ஆம் ஆண்டு அமைப்பில் ஏற்பட்ட பிளவைத் தொடர்ந்து அதிலிருந்து விலகியதாகவும் அவர் தெரிவித்துள்ளதாக பொலிஸ் தகவல்கள் கூறுகின்றன.

மேலும், சம்பவம் நடந்தபோது மதுபோதையில் இருந்த சந்தேகநபர், பொலிஸாரின் துப்பாக்கியைப் பறித்து அதனை இயக்கும் முறையைப் பற்றிப் பேசியதுடன், “உங்களுக்கு யார் பயிற்சி தந்தார்கள்?” என ஏளனமாகக் கேட்டதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

திருமணமாகி மூன்று பிள்ளைகளின் தந்தையான சந்தேகநபர் தொடர்பில் பல்வேறு கோணங்களில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

தெஹிவளை கைக்குண்டு தாக்குதல் சம்பவம்;  இருவர் கைது!
செய்திகள்

தெஹிவளை கைக்குண்டு தாக்குதல் சம்பவம்; இருவர் கைது!

September 26, 2026
பொலன்னறுவை சிறுநீரக வைத்தியசாலையில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு; 7 பேர் காயம்
செய்திகள்

பொலன்னறுவை சிறுநீரக வைத்தியசாலையில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு; 7 பேர் காயம்

September 26, 2026
நாட்டின் பல பகுதிகளில் இன்று மழையுடன் கூடிய வானிலை!
செய்திகள்

நாட்டின் பல பகுதிகளில் இன்று மழையுடன் கூடிய வானிலை!

September 26, 2026
உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு ராமர் பாலத்துடன் தொடர்புடைய 3வது மணல் திட்டை நோக்கி பயணம்!
செய்திகள்

உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு ராமர் பாலத்துடன் தொடர்புடைய 3வது மணல் திட்டை நோக்கி பயணம்!

September 25, 2026
“ஹோர்முஸ் பாதுகாக்க ஈரானுடன் மோத தயார் பிரான்ஸ் அதிரடி!
உலக செய்திகள்

“ஹோர்முஸ் பாதுகாக்க ஈரானுடன் மோத தயார் பிரான்ஸ் அதிரடி!

September 25, 2026
22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் 95 மேலதிக வாக்குகளால் பாராளுமன்றில் நிறைவேற்றம்!
செய்திகள்

22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் 95 மேலதிக வாக்குகளால் பாராளுமன்றில் நிறைவேற்றம்!

September 25, 2026
Next Post
வெளிநாட்டு செலாவணி இழப்பு விவகாரம்; மத்திய வங்கி அதிகாரிகளிடம் விசாரணை!

வெளிநாட்டு செலாவணி இழப்பு விவகாரம்; மத்திய வங்கி அதிகாரிகளிடம் விசாரணை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு