Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கடல் கொந்தளிப்பு தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தின் எச்சரிக்கை

கடல் கொந்தளிப்பு தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தின் எச்சரிக்கை

5 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து வளிமண்டலவியல் திணைக்களத்தினால் விசேட எச்சரிக்கை அறிக்கை ஒன்று வௌியிடப்பட்டுள்ளது.

இன்று (28) முற்பகல் 11.00 மணிக்கு வெளியிடப்பட்டுள்ள இந்த அறிவித்தல், நாளை (29) முற்பகல் வரை அடுத்த 24 மணித்தியாலங்களுக்குச் செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, காங்கேசன்துறையிலிருந்து மன்னார், கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களுக்கு இந்த எச்சரிக்கை அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த கடல் பிராந்தியங்களில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 50-60 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் என்பதுடன், கடல் பகுதிகள் கொந்தளிப்பாகக் காணப்படலாம் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.

அத்துடன், சிலாபத்திலிருந்து கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடலோரப் பகுதிகளில் கடல் அலைகளின் உயரமானது சுமார் 2.0 – 3.0 மீற்றர் வரை உயர்வதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாகவும் அந்த அறிவித்தலில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனவே, இது குறித்து அவதானத்துடன் செயற்படுமாறும், வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்படும் அடுத்தடுத்த அறிவிப்புகள் குறித்து விழிப்புடன் இருக்குமாறும் கடற்றொழில் மற்றும் கடற்படைச் சமூகத்தினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

அநுராதபுரம் புனித பூமி அபிவிருத்தித் திட்டத்திற்கு எதிர்ப்பு; கஸ்ஸப தேரர் உள்ளிட்ட மூவர் சாகும்வரை உண்ணாவிரதம்!
செய்திகள்

அநுராதபுரம் புனித பூமி அபிவிருத்தித் திட்டத்திற்கு எதிர்ப்பு; கஸ்ஸப தேரர் உள்ளிட்ட மூவர் சாகும்வரை உண்ணாவிரதம்!

November 11, 2026
ரம்பேவ பேருந்து விபத்து தொடர்பில் விரிவான விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு;  4 பேர் பலி, 71 பேர் காயம்!
செய்திகள்

ரம்பேவ பேருந்து விபத்து தொடர்பில் விரிவான விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு; 4 பேர் பலி, 71 பேர் காயம்!

November 11, 2026
யாழ்ப்பாணத்திற்கும் அறிமுகமாகிறது மெட்ரோ சொகுசுப் பேருந்துச் சேவை; ஆரம்பகட்ட நடவடிக்கைகள் முன்னெடுப்பு!
செய்திகள்

யாழ்ப்பாணத்திற்கும் அறிமுகமாகிறது மெட்ரோ சொகுசுப் பேருந்துச் சேவை; ஆரம்பகட்ட நடவடிக்கைகள் முன்னெடுப்பு!

November 11, 2026
வீதிவிளக்கை அணைக்க முயன்றபோது மின்சாரம் தாக்கி வயோதிபத் தம்பதியினர் பலி; குருணாகலில் சோகம்!
செய்திகள்

வீதிவிளக்கை அணைக்க முயன்றபோது மின்சாரம் தாக்கி வயோதிபத் தம்பதியினர் பலி; குருணாகலில் சோகம்!

November 11, 2026
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மழைக்கு வாய்ப்பு; வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு!
செய்திகள்

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மழைக்கு வாய்ப்பு; வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு!

November 11, 2026
மட்டக்களப்பில் கோர விபத்து; ஒருவர் பலி, மற்றொருவர் காயம்!
செய்திகள்

மட்டக்களப்பில் கோர விபத்து; ஒருவர் பலி, மற்றொருவர் காயம்!

November 10, 2026
Next Post
கடந்த ஆட்சிக்காலத்தில் புனரமைக்கப்பட்ட மட்டு நகர் புதுப்பாலம் உடைந்துவீழ்ந்தது

கடந்த ஆட்சிக்காலத்தில் புனரமைக்கப்பட்ட மட்டு நகர் புதுப்பாலம் உடைந்துவீழ்ந்தது

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு