Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ரம்பேவ பேருந்து விபத்து தொடர்பில் விரிவான விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு;  4 பேர் பலி, 71 பேர் காயம்!

ரம்பேவ பேருந்து விபத்து தொடர்பில் விரிவான விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு; 4 பேர் பலி, 71 பேர் காயம்!

10 minutes ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

அநுராதபுரம், ரம்பேவ பகுதியில் மூன்று பேருந்துகள் மோதி இடம்பெற்ற கோர விபத்து தொடர்பில் விரிவான விசாரணைகளை முன்னெடுத்து, அதன் அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு அநுராதபுரம் மேலதிக நீதவான் டி.எல். சமரசிங்க, மிகிந்தலை பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

இந்த விபத்து தொடர்பில் பொலிஸார் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த பி-அறிக்கையைப் பரிசீலித்த மேலதிக நீதவான், விபத்து இடம்பெற்ற இடத்தையும் விபத்துக்குள்ளான மூன்று பேருந்துகளையும் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.

இதன்போது, விபத்துக்குள்ளான ஒவ்வொரு பேருந்தையும் மோட்டார் வாகன பரிசோதகர் மூலம் தனித்தனியாக ஆய்வு செய்து, அதற்கான அறிக்கைகளை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும் பொலிஸாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்ந்து அநுராதபுரம் போதனா வைத்தியசாலைக்குச் சென்ற மேலதிக நீதவான், விபத்தில் உயிரிழந்தவர்களின் சடலங்களையும் பார்வையிட்டுள்ளார்.

அத்துடன், உயிரிழந்தவர்களுக்கான பிரேத பரிசோதனைகளை மேற்கொண்டு உரிய அறிக்கைகளை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு விசேட சட்ட வைத்திய அதிகாரிக்கு உத்தரவிட்டுள்ளார். பிரேத பரிசோதனைகளின் பின்னர் சடலங்களை உறவினர்களிடம் ஒப்படைக்கவும் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

ஏ-9 வீதியின் ரம்பேவ பகுதியில் நேற்று (10) இடம்பெற்ற இந்தக் கோர விபத்தில் நால்வர் உயிரிழந்ததுடன், மேலும் 71 பேர் காயமடைந்துள்ளனர்.

இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான இரண்டு பேருந்துகளும் தனியார் பேருந்து ஒன்றும் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

ஆரம்பகட்ட பொலிஸ் விசாரணைகளின்படி, ஒரு பேருந்தின் சாரதி ஆபத்தான முறையிலும் கவனக்குறைவாகவும் வாகனத்தை செலுத்தியமையே விபத்துக்குக் காரணமாக இருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியாவிலிருந்து ரம்பேவ நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்து ஒன்று, அதே திசையில் சென்ற தனியார் பேருந்தை முந்திச் செல்ல முற்பட்டபோது, எதிர்திசையில் வந்த மற்றுமொரு இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்துடன் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

யாழ்ப்பாணத்திற்கும் அறிமுகமாகிறது மெட்ரோ சொகுசுப் பேருந்துச் சேவை; ஆரம்பகட்ட நடவடிக்கைகள் முன்னெடுப்பு!
செய்திகள்

யாழ்ப்பாணத்திற்கும் அறிமுகமாகிறது மெட்ரோ சொகுசுப் பேருந்துச் சேவை; ஆரம்பகட்ட நடவடிக்கைகள் முன்னெடுப்பு!

November 11, 2026
வீதிவிளக்கை அணைக்க முயன்றபோது மின்சாரம் தாக்கி வயோதிபத் தம்பதியினர் பலி; குருணாகலில் சோகம்!
செய்திகள்

வீதிவிளக்கை அணைக்க முயன்றபோது மின்சாரம் தாக்கி வயோதிபத் தம்பதியினர் பலி; குருணாகலில் சோகம்!

November 11, 2026
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மழைக்கு வாய்ப்பு; வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு!
செய்திகள்

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மழைக்கு வாய்ப்பு; வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு!

November 11, 2026
மட்டக்களப்பில் கோர விபத்து; ஒருவர் பலி, மற்றொருவர் காயம்!
செய்திகள்

மட்டக்களப்பில் கோர விபத்து; ஒருவர் பலி, மற்றொருவர் காயம்!

November 10, 2026
மட்டக்களப்பில் மைதானத்தை உரிமை கோரிய பெரும்பான்மை இனத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற பொலிஸ் அதிகாரி; விரட்டியடித்த மக்கள்!
செய்திகள்

மட்டக்களப்பில் மைதானத்தை உரிமை கோரிய பெரும்பான்மை இனத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற பொலிஸ் அதிகாரி; விரட்டியடித்த மக்கள்!

November 10, 2026
ஒப்பந்தங்களை மீறிய பல்கலைக்கழக விரிவுரையாளர்களிடமிருந்து ரூ.30 பில்லியன் மீட்க நடவடிக்கை; COPE உத்தரவு!
செய்திகள்

ஒப்பந்தங்களை மீறிய பல்கலைக்கழக விரிவுரையாளர்களிடமிருந்து ரூ.30 பில்லியன் மீட்க நடவடிக்கை; COPE உத்தரவு!

November 10, 2026

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு