அநுராதபுரம் புனித பூமி அபிவிருத்தித் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து, கஸ்ஸப தேரர் உள்ளிட்ட மூன்று பௌத்த தேரர்கள் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
குறித்த அபிவிருத்தித் திட்டத்திற்கு எதிராக பௌத்த தேரர்கள் குழுவொன்று, ருவன்வெலிசாயவிற்கு அருகிலுள்ள தானசாலை வளாகத்தில் சத்தியாக்கிரகப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளது.
இந்தப் போராட்டத்தின் ஒரு பகுதியாகவே கஸ்ஸப தேரர் உள்ளிட்ட மூன்று தேரர்களும் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அநுராதபுரம் புனித பூமி அபிவிருத்தித் திட்டத்திற்கு எதிரான இந்தப் போராட்டம் அப்பகுதியில் கவனத்தை ஈர்த்துள்ளது.








