Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
நாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற விபத்துகளில் நால்வர் பலி; பொலிஸார் எச்சரிக்கை!

நாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற விபத்துகளில் நால்வர் பலி; பொலிஸார் எச்சரிக்கை!

3 months ago
in செய்திகள்

நாட்டின் பல பகுதிகளில் நேற்று (29) இடம்பெற்ற விபத்துகளில் சிக்கி பல இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.

இந்த விபத்துகள் அநுராதபுரம், கல்கிரியாகம, சமனலவெவ மற்றும் கிரானேகம ஆகிய பகுதிகளில் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று அதிகாலை அநுராதபுரம் – ரம்பேவ வீதியின் சாலியபுர கல்வல சந்திக்கருகில் ரம்பேவ நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளொன்று வலது பக்கமாக திருப்ப முற்பட்ட போது, பின்னால் வந்த பேருந்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இவ்விபத்தில் மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றவரும் பின்னால் பயணித்தவரும் காயமடைந்து அநுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், பின்னால் பயணித்தவர் உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் குருந்தங்குளம பகுதியைச் சேர்ந்த 17 வயதுடையவர் ஆவார்.

பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், அநுராதபுரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னனெடுத்து வருகின்றனர்.

இதேவேளை, நேற்று மாலை கலேவெல – கெகிராவ வீதியின் 21ஆம் கிலோமீற்றர் தூணுக்கு அருகில் கெகிராவ நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளொன்று, எதிரே வந்த வேன் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இவ்விபத்தில் மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றவர், பின்னால் பயணித்தவர் மற்றும் வேனின் சாரதி ஆகியோர் காயமடைந்து ஆடியகல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக தம்புள்ளை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட பின்னர் பின்னால் பயணித்தவர் உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் தேவஹுவ பகுதியைச் சேர்ந்த 16 வயதுடையவர் ஆவார்.

கல்கிரியாகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், நேற்று நண்பகல் சமனலவெவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொழும்பு – பதுளை பிரதான வீதியின் பம்பஹின்ன பகுதியில் பதுளை திசை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளொன்று, செலுத்துனரின் கட்டுப்பாட்டை இழந்து வீதியில் கவிழ்ந்ததில், அதன் பின்னால் பயணித்தவர் எதிரே வந்த பேருந்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளார்.

இவ்விபத்தில் மோட்டார் சைக்கிள் செலுத்துனரும் பின்னால் பயணித்தவரும் காயமடைந்து பம்பஹின்ன வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் பின்னால் பயணித்தவர் ஏற்கனவே உயிரிழந்திருந்தார்.

இவ்வாறு உயிரிழந்தவர் பலங்கொடை பகுதியைச் சேர்ந்த 37 வயதுடையவர் ஆவார். பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், சமனலவெவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அதேநேரம் நேற்று மாலை கிரானேகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தம்புள்ளை – புப்பொகம வீதியின் ஆனகட்டாவ பகுதியில் புப்பொகம திசை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளொன்று, லொறியொன்றை முந்திச் செல்ல முயன்றபோது செலுத்துனரின் கட்டுப்பாட்டை இழந்து வீதியில் கவிழ்ந்து, எதிரே வந்த முச்சக்கரவண்டியுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இவ்விபத்தில் மோட்டார் சைக்கிள் செலுத்துனர் காயமடைந்து தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் தேவஹுவ பகுதியைச் சேர்ந்த 20 வயதுடையவர் ஆவார்.

முச்சக்கரவண்டியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், கிரானேகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

வாடகைக்கு வீடு வழங்குவோர் அவதானம்!; குற்றச் செயல்கள் இடம்பெற்றால் உரிமையாளர்களுக்கும் சட்ட நடவடிக்கை!
செய்திகள்

வாடகைக்கு வீடு வழங்குவோர் அவதானம்!; குற்றச் செயல்கள் இடம்பெற்றால் உரிமையாளர்களுக்கும் சட்ட நடவடிக்கை!

September 28, 2026
சம்மாந்துறை பொலிஸ் பிரிவில் இரு பிள்ளைகளின் தாய் தவறான முடிவு
செய்திகள்

சம்மாந்துறை பொலிஸ் பிரிவில் இரு பிள்ளைகளின் தாய் தவறான முடிவு

September 28, 2026
அருச்சுணா, முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஹரீஸ் உட்பட 6 பேரை மட்டு நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவு
செய்திகள்

அருச்சுணா, முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஹரீஸ் உட்பட 6 பேரை மட்டு நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவு

September 28, 2026
மண்சரிவு அபாயத்தில் வாழ்ந்த 51 குடும்பங்களுக்கு புதிய வீடுகள்!
செய்திகள்

மண்சரிவு அபாயத்தில் வாழ்ந்த 51 குடும்பங்களுக்கு புதிய வீடுகள்!

September 28, 2026
திலீபன் சிலை அகற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்!
காணொளிகள்

திலீபன் சிலை அகற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்!

September 28, 2026
குற்றவாளியாக பெயரிடப்பட்டார் நாமல்!
செய்திகள்

குற்றவாளியாக பெயரிடப்பட்டார் நாமல்!

September 28, 2026
Next Post
தேங்கு ஏற்றுமதியில் இலங்கைக்கு 21% வளர்ச்சி; 5 மாதங்களில் 514 மில்லியன் டொலர் வருமானம்!

தேங்கு ஏற்றுமதியில் இலங்கைக்கு 21% வளர்ச்சி; 5 மாதங்களில் 514 மில்லியன் டொலர் வருமானம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.