பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்திலிருந்து பெஷாவர் நோக்கிப் பயணித்த பேருந்து, இன்று (03) கைபர் பக்துவா மாகாணத்தின் டிரா இஸ்மாயில் கான் மாவட்டத்திலுள்ள மலைப்பாங்கான பகுதியில் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 40 பேர் உயிரிழந்துள்ளனர்.
குறித்த பேருந்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 48 பேர் பயணம் செய்திருந்ததாகவும் அதில் 8 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் தகவல் கிடைத்ததும் விரைந்து சென்ற மீட்புப் படையினர், காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள வைத்தியசாலையில் சேர்த்துள்ளனர்.
பேருந்தின் பிரேக் செயலிழந்ததே விபத்துக்கான ஆரம்பகட்ட காரணமாக இருக்கலாம் என முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.








