Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தமிழ்நாடு முதலமைச்சர் விஜயை சந்தித்து ஈழமக்களின் பிரச்சனைகள் குறித்து கலந்துரையாடிய தமிழ்த் தேசியப் பேரவை

தமிழ்நாடு முதலமைச்சர் விஜயை சந்தித்து ஈழமக்களின் பிரச்சனைகள் குறித்து கலந்துரையாடிய தமிழ்த் தேசியப் பேரவை

2 months ago
in அரசியல், செய்திகள், முக்கிய செய்திகள்

தமிழ்த் தேசியப் பேரவையின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் 7 பேர் கொண்ட குழுவினர் இந்தியா தமிழ்நாட்டிற்கு சென்று சென்னையில் தமிழ்நாடு அரசுத் தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் சந்திரசேகர் ஜோசப் விஜய் இன்று வெள்ளிக்கிழமை (03) சந்தித்து ஈழதமிழ் மக்கள் பிரச்சனை தொடர்பாக கலந்துரையாடி எழுத்து மூலமாக கோரிக்கை கடிதம் ஒன்றை கையளிததுள்ளதாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

தமிழ்நாட்டு முதலமைச்சர் விஜய சந்திப்பு தொடர்பாக தமிழ் தேசிய பேரவை இன்று ஊடக அறிக்கை ஒன்றை வெளிட்டுள்ளனர்.

“இலங்கையின் வடக்கு, கிழக்கு தமிழர் தாயகப் பிரதேசமான ஈழத்தமிழ்த் தேச மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் அரசியல் தரப்புகளில் முக்கிய அரசியல் கூட்டமைப்பாக விளங்கும் தமிழ்த் தேசியப் பேரவையினராகிய நாம் இன்று சென்னையில் தமிழ்நாடு முதலமைச்சர் சந்திரசேகர் ஜோசப் விஜய் தமிழ்நாடு அரசுத் தலைமைச் செயலகத்தில் சந்தித்து விரிவான கலந்துரையாடலை மேற்கொண்டு எழுத்துமூலமாக கோரிக்கை கடிதம் ஒன்றை கையளித்துள்ளோம்.

இச்சந்திப்பில், ஈழத்தமிழ் மக்கள் தற்போது எதிர்நோக்கும் அரசியல், மனித உரிமைகள் பிரச்சினைகள், ஒற்றையாட்சி அரசியலமைப்பு முறை ஒழிக்கப்பட்டு தமிழர் தேசத்தின் இறைமையை அங்கீகரிக்கும் சமஷ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வின் அவசியம், ஈழத்தமிழர் இனவழிப்புக்கு சர்வதேச சுயாதீன விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டிய அவசியம், இந்திய–ஈழத் தமிழ்க் கடற்தொழிலாளர்களின் பிரச்சினைக்கு நிலையான தீர்வு காணும் நடவடிக்கைகள், இந்தியாவில் தங்கியுள்ள ஈழத் தமிழ் அகதிகளின் நீண்டகாலப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணுதல் உள்ளிட்ட பல முக்கிய விடயங்கள் தொடர்பாகக் கலந்துரையாடப்பட்டது.

குறித்த சந்திப்பில், ஈழத்தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசியப் பேரவையின் தலைவருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, பொதுச்செயலாளருமான செல்வராசா கஜேந்திரன், தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொன்னுத்துரை ஐங்கரநேசன், ஜனநாயகத் தமிழர் கட்சியின் தலைவரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான கே. வி. தவராசா, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தேசிய அமைப்பாளர், தருமலிங்கம் சுரேஷ், அந்த கட்சியின் உத்தியோகபூர்வ பேச்சாளரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான கனகரட்ணம் சுகாஷ், கொள்கைப் பரப்புச் செயலாளரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான நடராஜர் காண்டீபன் ஆகிய ஏழு பேர் கொண்ட குழுவினர் கலந்து கொண்டனர். என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

சிறிய பிரதேச சபைகளுக்கு வழங்கப்படும் நிதி அளவிலேயே அதிக மக்கள் தொகையை கொண்ட கல்முனைக்கும் நிதி வழங்கப்படுவது நடைமுறையில் உள்ள குறைபாடாகும் : கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ஏ.ரீ.எம்.றாபி
செய்திகள்

சிறிய பிரதேச சபைகளுக்கு வழங்கப்படும் நிதி அளவிலேயே அதிக மக்கள் தொகையை கொண்ட கல்முனைக்கும் நிதி வழங்கப்படுவது நடைமுறையில் உள்ள குறைபாடாகும் : கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ஏ.ரீ.எம்.றாபி

August 17, 2026
மட்டு மாநகர சபை வழங்கிய நியமனங்கள் தொடர்பில் ஈ.பி.டி.பி முறைப்பாடு
காணொளிகள்

மட்டு மாநகர சபை வழங்கிய நியமனங்கள் தொடர்பில் ஈ.பி.டி.பி முறைப்பாடு

August 17, 2026
வரலாற்றுப் பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் நல்லூர் கந்தன் கொடியேற்றம்!
செய்திகள்

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் நல்லூர் கந்தன் கொடியேற்றம்!

August 17, 2026
GovPay மூலம் போக்குவரத்து அபராதம் செலுத்தும் வசதி; சாரதிகளுக்கு பொலிஸார் முக்கிய அறிவிப்பு!
செய்திகள்

GovPay மூலம் போக்குவரத்து அபராதம் செலுத்தும் வசதி; சாரதிகளுக்கு பொலிஸார் முக்கிய அறிவிப்பு!

August 17, 2026
சுமார் 1 பில்லியன் டொலர் பணம் சட்டவிரோதமாக வெளிநாடு கடத்தல்; நான்கு வங்கி முகாமையாளர்கள் கைது!
செய்திகள்

சுமார் 1 பில்லியன் டொலர் பணம் சட்டவிரோதமாக வெளிநாடு கடத்தல்; நான்கு வங்கி முகாமையாளர்கள் கைது!

August 17, 2026
அனுரகுமார திஸாநாயக்கவின் அரசாங்கம் 20 வருடங்களுக்கு நீடிக்கும்; ஹிஸ்புல்லாவிற்கு எதிராக உடனடி விசாரணை நடத்த வேண்டும்’ . ஈரோஸ் பிரபா
காணொளிகள்

அனுரகுமார திஸாநாயக்கவின் அரசாங்கம் 20 வருடங்களுக்கு நீடிக்கும்; ஹிஸ்புல்லாவிற்கு எதிராக உடனடி விசாரணை நடத்த வேண்டும்’ . ஈரோஸ் பிரபா

August 17, 2026
Next Post
கல்முனையில் டெங்கு தாக்கம் ஏற்படாத வகையில் கட்டுப்படுத்த விசேட நடவடிக்கை

கல்முனையில் டெங்கு தாக்கம் ஏற்படாத வகையில் கட்டுப்படுத்த விசேட நடவடிக்கை

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு