Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் விநாயகமூர்த்தி முரளிதரனிடம் சிஐடி வாக்குமூலம் பதிவு?

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் விநாயகமூர்த்தி முரளிதரனிடம் சிஐடி வாக்குமூலம் பதிவு?

3 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளின் போது வெளிப்படுத்தப்பட்ட சில விடயங்கள் குறித்து, முன்னாள் அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) என்பவரிடம் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் வாக்குமூலம் பெற்றுள்ளதாக சகோதர மொழி பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அந்தச் செய்தியின்படி, பிள்ளையான் தரப்பினருக்கும் அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலேவுக்கும் இடையிலான தொடர்பு மற்றும் கிழக்கு மாகாணத்தில் அவர்கள் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து பல தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

பிள்ளையானின் குழுவினருக்கு தங்குமிட வசதிகளை வழங்கியபோது, சுரேஷ் சலேவினால் தொடர்புபடுத்தப்பட்ட நபர்களே அந்த வசதிகளை வழங்கியதாகவும், அதற்கான நிதி வசதிகளும் அவர்களாலேயே வழங்கப்பட்டதாகவும் கருணா அம்மான் ஆதாரங்களுடன் வெளிப்படுத்தியுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்கள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கருணா அம்மான் மற்றும் பிள்ளையான் ஆகிய இருவருமே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவளித்து வந்தாலும், அவர்கள் இருவருக்கும் இடையே நீண்டகால பகை இருந்து வந்ததாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

இதற்கிடையில், பிள்ளையான் தரப்பினரால் பொலன்னறுவை, வெலிக்கந்தை பகுதியில் நடத்தப்பட்ட சித்திரவதை முகாம் தொடர்பிலும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் பலரிடம் வாக்குமூலங்களைப் பெற்றுள்ளது. கொழும்பு நகருக்குள் அவர்களின் நடவடிக்கைகளுக்கு ஆதரவளித்த தரப்பினர் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த வட்டாரங்கள் மேலும் குறிப்பிடுகின்றன.

Tags: BatticaloaNewsinternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

எங்கள் அரசாங்கம் இல்லாமலிருந்திருந்தால் எரிபொருள் விலை 700 ரூபாவை எட்டிருக்கும்; நாமல் கருணாரத்ன
செய்திகள்

எங்கள் அரசாங்கம் இல்லாமலிருந்திருந்தால் எரிபொருள் விலை 700 ரூபாவை எட்டிருக்கும்; நாமல் கருணாரத்ன

October 3, 2026
தடுப்பூசி செலுத்துதல் தொடர்பில் GMOA வெளியிட்ட கருத்திற்கு கால்நடை வைத்தியர்கள் எதிர்ப்பு
செய்திகள்

தடுப்பூசி செலுத்துதல் தொடர்பில் GMOA வெளியிட்ட கருத்திற்கு கால்நடை வைத்தியர்கள் எதிர்ப்பு

October 3, 2026
கிழக்கு பல்கலைக்கழகத்தின் 30வது பொதுப்பட்டமளிப்பு விழா
செய்திகள்

கிழக்கு பல்கலைக்கழகத்தின் 30வது பொதுப்பட்டமளிப்பு விழா

October 3, 2026
இலங்கைக்கு கடத்த முயன்ற கடலட்டைகள் பறிமுதல்
செய்திகள்

இலங்கைக்கு கடத்த முயன்ற கடலட்டைகள் பறிமுதல்

October 3, 2026
உஸ்பெகிஸ்தான் பெண்ணை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய குற்றம்; முச்சக்கரவண்டி ஓட்டுநருக்கு 10 ஆண்டுகள் சிறை!
செய்திகள்

உஸ்பெகிஸ்தான் பெண்ணை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய குற்றம்; முச்சக்கரவண்டி ஓட்டுநருக்கு 10 ஆண்டுகள் சிறை!

October 3, 2026
நாட்டின் பல பகுதிகளுக்கு பலத்த மின்னல் எச்சரிக்கை!
செய்திகள்

நாட்டின் பல பகுதிகளுக்கு பலத்த மின்னல் எச்சரிக்கை!

October 3, 2026
Next Post
பஸ் கட்டணத் திருத்தத்தால் மக்களுக்கு அசௌகரியம்

பஸ் கட்டணத் திருத்தத்தால் மக்களுக்கு அசௌகரியம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு