Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பஸ் கட்டணத் திருத்தத்தால் மக்களுக்கு அசௌகரியம்

பஸ் கட்டணத் திருத்தத்தால் மக்களுக்கு அசௌகரியம்

5 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

முன்மொழியப்பட்டுள்ள வருடாந்த பஸ் கட்டணத் திருத்தம் ஒரு முரண்பாடானது என தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

கட்டணங்களைக் கட்டுப்படுத்துவதை அரசாங்கம் வேண்டுமென்றே தவிர்த்துள்ளதாக அதன் தலைவர் கெமுனு விஜேரத்ன குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் 10,000 க்கும் மேற்பட்ட குறுகிய தூர சேவை பஸ்களும், சுமார் 3,000 நீண்ட தூர சேவை பஸ்களும் இயக்கப்படுவதாக அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

இருப்பினும், இந்த இரண்டு சேவைகளுக்கும் இரண்டு வெவ்வேறு கட்டண முறைகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் கடும் அசௌகரியங்களுக்கு உள்ளாவார்கள் என கெமுனு விஜேரத்ன சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேபோல், எதிர்காலத்தில் எரிபொருள் விலை மேலும் குறைந்தால், குறுகிய தூர சேவைகளுக்காக வழங்கப்பட்டுள்ள 12 சதவீத கட்டணத் திருத்தத்திற்கு என்ன நடக்கும் என்ற கேள்வி எழுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதற்கமைய, டீசல் விலை குறைந்தாலும் எதிர்காலத்தில் குறுகிய தூர சேவை பஸ் கட்டணங்களை குறைக்க முடியாமல் போகும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

வருடாந்த பஸ் கட்டணத் திருத்தத்தின் போது, நீண்ட தூர சேவைகளுக்காக 20 சதவீத கட்டண உயர்வை வழங்குவதற்கு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்த கெமுனு விஜேரத்ன, இதன் காரணமாக எதிர்காலத்தில் பஸ் கைத்தொழில் கடுமையான நெருக்கடியை எதிர்கொள்ள நேரிடும் என வலியுறுத்தியுள்ளார்.

முன்மொழியப்பட்டுள்ள பஸ் கட்டணத் திருத்தம் இன்று (05) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewspoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

நாமல் ராஜபக்சவின் பிணை உத்தரவுக்கு மேல் நீதிமன்றம் இடைக்காலத் தடை!
செய்திகள்

நாமல் ராஜபக்சவின் பிணை உத்தரவுக்கு மேல் நீதிமன்றம் இடைக்காலத் தடை!

November 18, 2026
குகையில் குழந்தை பெற்றெடுத்த 15 வயது தாய் O/L பரீட்சைக்குத் தயாராகிறார்
செய்திகள்

குகையில் குழந்தை பெற்றெடுத்த 15 வயது தாய் O/L பரீட்சைக்குத் தயாராகிறார்

November 18, 2026
விமல் வீரவன்சவின் மனைவிக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை
செய்திகள்

விமல் வீரவன்சவின் மனைவிக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை

November 18, 2026
பிக்கு நிலையிலிருந்து விலக்கப்பட்டுள்ள இராஜாங்கனே சத்தாரதன உள்ளிட்ட இருவர் அனுராதபுரத்தில் கைது!
செய்திகள்

பிக்கு நிலையிலிருந்து விலக்கப்பட்டுள்ள இராஜாங்கனே சத்தாரதன உள்ளிட்ட இருவர் அனுராதபுரத்தில் கைது!

November 18, 2026
ஞானசார தேரருக்கான 4 வருட சிறைத்தண்டனையை மேன்முறையீட்டு நீதிமன்றம் உறுதி செய்தது!
செய்திகள்

ஞானசார தேரருக்கான 4 வருட சிறைத்தண்டனையை மேன்முறையீட்டு நீதிமன்றம் உறுதி செய்தது!

November 18, 2026
பரீட்சைத் திணைக்கள முன்னாள் பிரதி ஆணையாளரின் பிள்ளை பரீட்சையில் முதலிடம்; விசாரணை கோரும் ரோஹினி
செய்திகள்

பரீட்சைத் திணைக்கள முன்னாள் பிரதி ஆணையாளரின் பிள்ளை பரீட்சையில் முதலிடம்; விசாரணை கோரும் ரோஹினி

November 18, 2026
Next Post
நீர்கொழும்பு சிறைச்சாலையில் பதற்றம்; 20 பேர் காயம்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் பதற்றம்; 20 பேர் காயம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு