Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
2029ஆம் ஆண்டு நாமல் ராஜபக்ச தலைமையில் புதிய அரசை அமைப்போம்; ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கூட்டத்தில் வலியுறுத்தல்!

2029ஆம் ஆண்டு நாமல் ராஜபக்ச தலைமையில் புதிய அரசை அமைப்போம்; ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கூட்டத்தில் வலியுறுத்தல்!

3 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கோட்டே தொகுதி மக்கள் சந்திப்பு நேற்று (09) ஒபேசேகரபுர சமூக மண்டபத்தில் நடைபெற்றது. இதில் கட்சியின் முக்கிய தலைவர்கள் பங்கேற்று, தற்போதைய அரசின் செயற்பாடுகளை விமர்சித்ததுடன், 2029ஆம் ஆண்டு நாமல் ராஜபக்சவின் தலைமையில் புதிய அரசை அமைக்க பொதுமக்கள் ஆதரவு வழங்குமாறு அழைப்பு விடுத்தனர்.

நிகழ்வில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, தற்போதைய அரசாங்கம் வழங்கிய தேர்தல் வாக்குறுதிகளில் பல இன்னும் நிறைவேற்றப்படவில்லை என குற்றஞ்சாட்டினார். வேலைவாய்ப்பின்மை, அதிகரித்த வரிச்சுமை மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு காரணமாக மக்கள் பல்வேறு பொருளாதார சிரமங்களை எதிர்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், வெறுப்பை அடிப்படையாகக் கொண்ட அரசியலுக்கு பதிலாக அபிவிருத்தி, நல்லாட்சி மற்றும் மனிதநேயத்தை மையப்படுத்திய புதிய அரசியல் கலாசாரத்தை உருவாக்கத் தமது கட்சி தயாராக இருப்பதாகவும் நாமல் ராஜபக்ச கூறினார்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ எதிரிமான்ன, தற்போதைய அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பேற்று கணிசமான காலம் கடந்தும் கோட்டே தொகுதியில் குறிப்பிடத்தக்க அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்படவில்லை என விமர்சித்தார். மேலும், அண்மையில் இடம்பெற்ற சிறைச்சாலை வன்முறைச் சம்பவம் தொடர்பில் அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, நிகழ்வில் உரையாற்றிய இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர், கோட்டே நகரின் அபிவிருத்தி மற்றும் சுகாதார நிலைமை குறித்து கவலை வெளியிட்டதுடன், பொதுமக்கள் செலுத்தும் வரிப்பணிக்கேற்ப அரசாங்கமும் உள்ளூராட்சி மன்றங்களும் தங்களது பொறுப்புகளை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தினார்.

யூ.கே. சுமித் உடுகும்பர உரையாற்றுகையில், நாமல் ராஜபக்ச நாட்டின் எதிர்கால தலைவராக உருவெடுப்பார் என்ற நம்பிக்கையை வெளியிட்டதுடன், 2029ஆம் ஆண்டு தேர்தலை இலக்காகக் கொண்டு கட்சியினர் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் எனக் கூறினார்.

இந்த நிகழ்வில் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, நாடாளுமன்ற உறுப்பினர் சானக சம்பத் மதுகொட உள்ளிட்ட பல கட்சி முக்கியஸ்தர்கள் மற்றும் ஆதரவாளர்கள் கலந்துகொண்டனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

ஹட்டன் பேருந்து நிலையக் கடையில் 4 நாட்கள் தொடர் திருட்டு; சந்தேகநபரைத் தேடும் பொலிஸார்!
செய்திகள்

ஹட்டன் பேருந்து நிலையக் கடையில் 4 நாட்கள் தொடர் திருட்டு; சந்தேகநபரைத் தேடும் பொலிஸார்!

October 9, 2026
நாட்டின் பல பகுதிகளுக்கு 75 மி.மீ.க்கும் அதிக மழை எச்சரிக்கை; இடியுடன் கூடிய மழை தொடர்பில் அவதானம்!
செய்திகள்

நாட்டின் பல பகுதிகளுக்கு 75 மி.மீ.க்கும் அதிக மழை எச்சரிக்கை; இடியுடன் கூடிய மழை தொடர்பில் அவதானம்!

October 9, 2026
1,270 அபாயகரமான போதை மாத்திரைகளுடன் ஓய்வுபெற்ற வைத்தியர் உட்பட இருவர் கைது!
செய்திகள்

1,270 அபாயகரமான போதை மாத்திரைகளுடன் ஓய்வுபெற்ற வைத்தியர் உட்பட இருவர் கைது!

October 9, 2026
தமிழர்கள் எவ்வாறு இலங்கையர்களாக உணர முடியும்?”; பாராளுமன்றத்தில் துரைராசா ரவிகரன் கேள்வி!
செய்திகள்

தமிழர்கள் எவ்வாறு இலங்கையர்களாக உணர முடியும்?”; பாராளுமன்றத்தில் துரைராசா ரவிகரன் கேள்வி!

October 9, 2026
மருதமுனை கடற்கரையில் 69 வயதுடைய நபர் சடலமாக மீட்பு
செய்திகள்

மருதமுனை கடற்கரையில் 69 வயதுடைய நபர் சடலமாக மீட்பு

October 9, 2026
இலங்கையின் புதிய சட்ட மூலத்திற்கு எதிராக மட்டக்களப்பில் போராட்டம்
காணொளிகள்

இலங்கையின் புதிய சட்ட மூலத்திற்கு எதிராக மட்டக்களப்பில் போராட்டம்

October 9, 2026
Next Post
யாழ் நகரில் யாசகர்களை அகற்ற விசேட நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்டோர் வெளியேற்றம்!

யாழ் நகரில் யாசகர்களை அகற்ற விசேட நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்டோர் வெளியேற்றம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு