Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பில் ஆசிய நாடுகளின் தூதுவர்கள்; சுற்றுலா மற்றும் அபிவிருத்தி வாய்ப்புகள் குறித்து விரிவான கலந்துரையாடல்!

மட்டக்களப்பில் ஆசிய நாடுகளின் தூதுவர்கள்; சுற்றுலா மற்றும் அபிவிருத்தி வாய்ப்புகள் குறித்து விரிவான கலந்துரையாடல்!

3 months ago
in மட்டு செய்திகள்

கிழக்கு மாகாணத்தின் சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றம், குறிப்பாக சுற்றுலாத்துறையில் காணப்படும் முதலீட்டு மற்றும் அபிவிருத்தி வாய்ப்புகளை ஆராயும் நோக்கில் ஆசிய நாடுகளைச் சேர்ந்த தூதுவர்கள் குழுவொன்று இன்று மட்டக்களப்பு மாநகர சபைக்கு விஜயம் செய்தது.

மியன்மார், மலேசியா, வியட்நாம், தாய்லாந்து மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளின் இலங்கைக்கான தூதுவர்கள் பங்கேற்ற கலந்துரையாடல் மட்டக்களப்பு பொது நூலக மண்டபத்தில் நடைபெற்றது.

வருகை தந்த தூதுவர்கள் பாரம்பரிய மாலை அணிவித்து வரவேற்கப்பட்டதுடன், கிழக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படவுள்ள அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் ஒத்துழைப்பு வாய்ப்புகள் குறித்து கலந்துரையாடப்பட்டது.

இதன்போது, மட்டக்களப்பு மாநகர எல்லைக்குள் உள்ள முக்கிய சுற்றுலா தளங்கள், அவற்றை மேம்படுத்துவதற்கான திட்டங்கள் மற்றும் மாநகர சபையின் தற்போதைய செயற்பாடுகள் குறித்து விரிவாக விளக்கமளிக்கப்பட்டது.

மேலும், மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் வேலைத்திட்டங்களுக்கு தேவையான ஒத்துழைப்பு மற்றும் உதவிகளை வழங்குமாறு மாநகர சபை முதல்வர் சிவம் பாக்கியநாதன் தூதுவர்களிடம் கோரிக்கை விடுத்தார்.

நிகழ்வின் நிறைவில், ஐந்து நாடுகளின் தூதுவர்களுக்கும் பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னங்கள் வழங்கப்பட்டதுடன், ஒவ்வொரு நாட்டின் ஒத்துழைப்புடன் முன்னெடுக்கக்கூடிய அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான முன்மொழிவு அறிக்கைகளும் கையளிக்கப்பட்டன.

மட்டக்களப்பு மாநகர சபை முதல்வர் சிவம் பாக்கியநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், மாநகர சபை ஆணையாளர் என். தனஞ்செயன், மாநகர சபை உறுப்பினர்கள், அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewssrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஆசிரியர் சேவைக்குள் உள்வாங்குங்கள்; அனிரன் கோரிக்கை
செய்திகள்

அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஆசிரியர் சேவைக்குள் உள்வாங்குங்கள்; அனிரன் கோரிக்கை

October 10, 2026
களுத்துறை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடையவர் மட்டு வாழைச்சேனையில் கைது!
செய்திகள்

களுத்துறை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடையவர் மட்டு வாழைச்சேனையில் கைது!

October 10, 2026
இலங்கையின் புதிய சட்ட மூலத்திற்கு எதிராக மட்டக்களப்பில் போராட்டம்
காணொளிகள்

இலங்கையின் புதிய சட்ட மூலத்திற்கு எதிராக மட்டக்களப்பில் போராட்டம்

October 9, 2026
தேசிய கராத்தே போட்டியில் தங்கம் வென்று மட்டக்களப்பு வீரர் துஷ்யந்தன் சாதனை!
செய்திகள்

தேசிய கராத்தே போட்டியில் தங்கம் வென்று மட்டக்களப்பு வீரர் துஷ்யந்தன் சாதனை!

October 9, 2026
பொது இடங்களில் குப்பை கொட்டுவோருக்கு கண்காணிப்பு கமராக்கள் மூலம் தண்டம்; ஆளுநர் பணிப்பு
மட்டு செய்திகள்

பொது இடங்களில் குப்பை கொட்டுவோருக்கு கண்காணிப்பு கமராக்கள் மூலம் தண்டம்; ஆளுநர் பணிப்பு

October 7, 2026
மட்டு சந்திவெளியில் கட்டிட சுவர் இடிந்து விழுந்து மேசன் தொழிலாளி ப.லி
செய்திகள்

மட்டு சந்திவெளியில் கட்டிட சுவர் இடிந்து விழுந்து மேசன் தொழிலாளி ப.லி

October 6, 2026
Next Post
வங்கிக் கணக்குகளை பிறருக்கு பயன்படுத்த அனுமதிக்க வேண்டாம்; பொதுமக்களுக்கு மத்திய வங்கியின் முக்கிய எச்சரிக்கை!

வங்கிக் கணக்குகளை பிறருக்கு பயன்படுத்த அனுமதிக்க வேண்டாம்; பொதுமக்களுக்கு மத்திய வங்கியின் முக்கிய எச்சரிக்கை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு