Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு ஓய்வூதியத் திட்டம்; விரைவில் வரவுசெலவுத் திட்டத்தில் இணைக்க ஜனாதிபதி அறிவுறுத்தல்!

வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு ஓய்வூதியத் திட்டம்; விரைவில் வரவுசெலவுத் திட்டத்தில் இணைக்க ஜனாதிபதி அறிவுறுத்தல்!

3 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கைத் தொழிலாளர்களுக்காக முன்மொழியப்பட்டுள்ள பங்களிப்பு அடிப்படையிலான ஓய்வூதியத் திட்டத்தில் நிலவும் சிக்கல்களை விரைவாகத் தீர்த்து, அதனை இம்முறை வரவுசெலவுத் திட்ட முன்மொழிவுகளில் இணைக்குமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சின் 2026ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் திட்டங்களின் முன்னேற்றத்தை மீளாய்வு செய்வதற்கும், 2027ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் தொடர்பான முன்கூட்டிய கலந்துரையாடலிலும் பங்கேற்றபோதே ஜனாதிபதி இந்த அறிவுறுத்தல்களை வழங்கினார். இந்தக் கூட்டம் நேற்று முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

நாட்டிற்கு வெளிநாட்டு செலாவணியை ஈட்டித் தரும் முக்கிய துறைகளில் ஒன்றாக வெளிநாட்டு வேலைவாய்ப்புத் துறை விளங்குவதால், அங்கு பணிபுரியும் தொழிலாளர்களுக்காக ஒழுங்குபடுத்தப்பட்ட ஓய்வூதியத் திட்டமொன்றை விரைவில் நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி வலியுறுத்தினார்.

மேலும், மாவட்ட மட்டத்தில் சுற்றுலா அபிவிருத்தித் திட்டங்களை விரைவாகவும் திறம்படவும் செயல்படுத்துவதற்காக, அவற்றுக்கான நிதி ஒதுக்கீடுகளை மாவட்ட செயலாளர்களின் நிதி இருப்புகளுக்கு நேரடியாக வழங்குமாறும் அவர் அறிவுறுத்தினார்.

இதன் மூலம் மாவட்ட அபிவிருத்திக் குழுக்கள் மற்றும் சுற்றுலா ஒருங்கிணைப்புக் குழுக்களுடன் இணைந்து அபிவிருத்தித் திட்டங்களை விரைந்து நிறைவேற்ற முடியும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

அதேவேளை, சிகிரியா, கலேவெல மற்றும் திருகோணமலை பகுதிகளை மையமாகக் கொண்டு முன்மொழியப்பட்டுள்ள அபிவிருத்தித் திட்டங்களை வீதி அபிவிருத்தி அதிகார சபை, சுற்றுலா அமைச்சு மற்றும் தொல்பொருள் திணைக்களம் ஆகியவை இணைந்து ஒருங்கிணைந்த திட்டத்தின் கீழ் செயல்படுத்துமாறும் அவர் அறிவுறுத்தினார்.

அரச நிறுவனங்கள் தனித்தனியாக செயல்படுவதற்குப் பதிலாக ஒருங்கிணைந்த அணுகுமுறையில் செயற்படுவதன் மூலம் நேரத்தையும் வளங்களையும் பயனுள்ளதாக பயன்படுத்த முடியும் என்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வலியுறுத்தினார்.

Tags: BatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalpoliticalnewssrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

மைலத்தமடுவில் மீண்டும் கால்நடைகள் மீது துப்பாக்கிச் சூடு!
செய்திகள்

மைலத்தமடுவில் மீண்டும் கால்நடைகள் மீது துப்பாக்கிச் சூடு!

October 15, 2026
ஹோர்முஸ் நீரிணையில் உள்ள கண்ணி வெடியில் சிக்கிய சிங்கப்பூர் கப்பல்
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையில் உள்ள கண்ணி வெடியில் சிக்கிய சிங்கப்பூர் கப்பல்

October 15, 2026
இறைச்சிக்காக மாட்டின் இரண்டு பின்னங்கால்களையும் வெட்டி கடத்த முயற்சி
செய்திகள்

இறைச்சிக்காக மாட்டின் இரண்டு பின்னங்கால்களையும் வெட்டி கடத்த முயற்சி

October 15, 2026
கல்வி மறுசீரமைப்பு தொடர்பான தகவல்களைப் பெற புதிய இணையத்தளம் அறிமுகம்!
செய்திகள்

கல்வி மறுசீரமைப்பு தொடர்பான தகவல்களைப் பெற புதிய இணையத்தளம் அறிமுகம்!

October 15, 2026
மலையக அஸ்வெசும நிதியில் மோசடிசெய்ததை ஒப்புக்கொண்ட 14 ஊழியர்கள்
செய்திகள்

மலையக அஸ்வெசும நிதியில் மோசடிசெய்ததை ஒப்புக்கொண்ட 14 ஊழியர்கள்

October 15, 2026
சரத் பொன்சேகா மற்றும் ரஞ்சன் ராமநாயக்க வரிசையில் ஞானசார தேரரும் விடுதலை செய்யப்படவேண்டும்; அம்பிட்டியே தேரர்
செய்திகள்

சரத் பொன்சேகா மற்றும் ரஞ்சன் ராமநாயக்க வரிசையில் ஞானசார தேரரும் விடுதலை செய்யப்படவேண்டும்; அம்பிட்டியே தேரர்

October 15, 2026
Next Post
பாதை சீரமைப்பு கோரி வேவண்டன் தோட்ட மக்கள் ஆர்ப்பாட்டம்!

பாதை சீரமைப்பு கோரி வேவண்டன் தோட்ட மக்கள் ஆர்ப்பாட்டம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு