Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பாதை சீரமைப்பு கோரி வேவண்டன் தோட்ட மக்கள் ஆர்ப்பாட்டம்!

பாதை சீரமைப்பு கோரி வேவண்டன் தோட்ட மக்கள் ஆர்ப்பாட்டம்!

3 months ago
in செய்திகள்

நுவரெலியா மாவட்டத்தின் கொத்மலை பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட வேவண்டன் தோட்டத்துக்குச் செல்லும் பிரதான பாதையை அவசரமாக புனரமைக்கக் கோரி அப்பகுதி மக்கள் இன்று (17) கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வேவண்டன் தோட்டத்தில் சுமார் 48 குடும்பங்களைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். கடந்த கடும் மழையினால் தோட்டத்துக்குச் செல்லும் பிரதான பாதை கடுமையாக சேதமடைந்ததால், அன்றாட போக்குவரத்து மற்றும் அத்தியாவசிய சேவைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் தெரிவித்தனர்.

பாதை சேதமடைந்ததைத் தொடர்ந்து, தோட்டத்தில் இயங்கி வந்த பாடசாலையும் தற்போது செயல்படாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாக மாணவர்கள் அருகிலுள்ள பாடசாலைகளில் தங்கியிருந்து கல்வி கற்றதுடன், தற்போது மீண்டும் தங்களது வீடுகளுக்குத் திரும்பியுள்ளதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

பாதை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை விரைவாக சீரமைத்து வழங்குவதாக கொத்மலை பிரதேச செயலகம் உறுதியளித்திருந்த போதிலும், கடந்த ஒன்பது மாதங்களாக எந்தவித முன்னேற்றமும் இல்லை என மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

இதையடுத்து, சுமார் ஒரு கிலோமீட்டர் நீளமான சேதமடைந்த பாதையை உடனடியாக புனரமைக்குமாறு வலியுறுத்தி, பதாகைகள் ஏந்தியும் கோஷங்களை எழுப்பியும் வேவண்டன் தோட்டத்திலிருந்து கண்டி–நுவரெலியா பிரதான வீதியின் கெரண்டி எல்லை பகுதி வரை நடைபயணமாகச் சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தோட்ட மக்களின் போக்குவரத்து, கல்வி மற்றும் அத்தியாவசிய தேவைகள் வழமையான நிலைக்குத் திரும்பும் வகையில், பாதையை விரைவாக சீரமைத்து அடிப்படை வசதிகளை உடனடியாக ஏற்படுத்தித் தருமாறு அவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

மைலத்தமடுவில் மீண்டும் கால்நடைகள் மீது துப்பாக்கிச் சூடு!
செய்திகள்

மைலத்தமடுவில் மீண்டும் கால்நடைகள் மீது துப்பாக்கிச் சூடு!

October 15, 2026
ஹோர்முஸ் நீரிணையில் உள்ள கண்ணி வெடியில் சிக்கிய சிங்கப்பூர் கப்பல்
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையில் உள்ள கண்ணி வெடியில் சிக்கிய சிங்கப்பூர் கப்பல்

October 15, 2026
இறைச்சிக்காக மாட்டின் இரண்டு பின்னங்கால்களையும் வெட்டி கடத்த முயற்சி
செய்திகள்

இறைச்சிக்காக மாட்டின் இரண்டு பின்னங்கால்களையும் வெட்டி கடத்த முயற்சி

October 15, 2026
கல்வி மறுசீரமைப்பு தொடர்பான தகவல்களைப் பெற புதிய இணையத்தளம் அறிமுகம்!
செய்திகள்

கல்வி மறுசீரமைப்பு தொடர்பான தகவல்களைப் பெற புதிய இணையத்தளம் அறிமுகம்!

October 15, 2026
மலையக அஸ்வெசும நிதியில் மோசடிசெய்ததை ஒப்புக்கொண்ட 14 ஊழியர்கள்
செய்திகள்

மலையக அஸ்வெசும நிதியில் மோசடிசெய்ததை ஒப்புக்கொண்ட 14 ஊழியர்கள்

October 15, 2026
சரத் பொன்சேகா மற்றும் ரஞ்சன் ராமநாயக்க வரிசையில் ஞானசார தேரரும் விடுதலை செய்யப்படவேண்டும்; அம்பிட்டியே தேரர்
செய்திகள்

சரத் பொன்சேகா மற்றும் ரஞ்சன் ராமநாயக்க வரிசையில் ஞானசார தேரரும் விடுதலை செய்யப்படவேண்டும்; அம்பிட்டியே தேரர்

October 15, 2026
Next Post
அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் சர்ச்சை; அர்ச்சுனாவின் கருத்தால் சிறீதரன் எம்.பி மற்றும் அதிகாரிகள் வெளிநடப்பு!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் சர்ச்சை; அர்ச்சுனாவின் கருத்தால் சிறீதரன் எம்.பி மற்றும் அதிகாரிகள் வெளிநடப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு