Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் சர்ச்சை; அர்ச்சுனாவின் கருத்தால் சிறீதரன் எம்.பி மற்றும் அதிகாரிகள் வெளிநடப்பு!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் சர்ச்சை; அர்ச்சுனாவின் கருத்தால் சிறீதரன் எம்.பி மற்றும் அதிகாரிகள் வெளிநடப்பு!

3 months ago
in காணொளிகள், செய்திகள், முக்கிய செய்திகள்

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் ஏற்பட்ட குழப்பநிலை தொடர்பில், நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் செயற்பாடுகள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

இன்று (16) நடைபெற்ற கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தைத் தொடர்ந்து ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட அமைச்சர், கூட்டம் ஆரம்பத்தில் அமைதியாக நடைபெற்றதாகவும், பின்னர் ஏற்பட்ட சம்பவம் காரணமாக அது இடைநிறுத்தப்பட்டதாகவும் கூறினார்.

மேலும், நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா பல்வேறு கூட்டங்களில் குழப்பநிலையை ஏற்படுத்தி வருவதாகவும், அரச அதிகாரிகள் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைப்பதாகவும் அமைச்சர் குற்றஞ்சாட்டினார்.

அபிவிருத்திக் குழுக் கூட்டங்கள் மாவட்டத்தின் அபிவிருத்தி தொடர்பான தீர்மானங்களை எடுக்கும் தளமாக இருப்பதால், அவற்றை தனிப்பட்ட குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் இடமாக பயன்படுத்தக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.

இத்தகைய சம்பவங்கள் அதிகாரிகளின் பணியையும் மாவட்ட அபிவிருத்தி நடவடிக்கைகளையும் பாதிக்கக்கூடும் என்பதால், சம்பந்தப்பட்ட தரப்புகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

கிளிநொச்சி மாவட்டத்தின் அபிவிருத்திப் பணிகளை முன்னெடுக்கும் நோக்கில், எதிர்வரும் நாட்களில் மாவட்ட அபிவிருத்திக் குழு மீண்டும் கூடவுள்ளதாகவும், அப்போது தேவையான தீர்மானங்கள் எடுக்கப்படும் எனவும் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் குறிப்பிட்டார்.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

ஹோர்முஸ் நீரிணையில் உள்ள கண்ணி வெடியில் சிக்கிய சிங்கப்பூர் கப்பல்
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையில் உள்ள கண்ணி வெடியில் சிக்கிய சிங்கப்பூர் கப்பல்

October 15, 2026
இறைச்சிக்காக மாட்டின் இரண்டு பின்னங்கால்களையும் வெட்டி கடத்த முயற்சி
செய்திகள்

இறைச்சிக்காக மாட்டின் இரண்டு பின்னங்கால்களையும் வெட்டி கடத்த முயற்சி

October 15, 2026
கல்வி மறுசீரமைப்பு தொடர்பான தகவல்களைப் பெற புதிய இணையத்தளம் அறிமுகம்!
செய்திகள்

கல்வி மறுசீரமைப்பு தொடர்பான தகவல்களைப் பெற புதிய இணையத்தளம் அறிமுகம்!

October 15, 2026
மலையக அஸ்வெசும நிதியில் மோசடிசெய்ததை ஒப்புக்கொண்ட 14 ஊழியர்கள்
செய்திகள்

மலையக அஸ்வெசும நிதியில் மோசடிசெய்ததை ஒப்புக்கொண்ட 14 ஊழியர்கள்

October 15, 2026
சரத் பொன்சேகா மற்றும் ரஞ்சன் ராமநாயக்க வரிசையில் ஞானசார தேரரும் விடுதலை செய்யப்படவேண்டும்; அம்பிட்டியே தேரர்
செய்திகள்

சரத் பொன்சேகா மற்றும் ரஞ்சன் ராமநாயக்க வரிசையில் ஞானசார தேரரும் விடுதலை செய்யப்படவேண்டும்; அம்பிட்டியே தேரர்

October 15, 2026
கண்டி நகரில் புதிய மெட்ரோ பேருந்து சேவை!
செய்திகள்

கண்டி நகரில் புதிய மெட்ரோ பேருந்து சேவை!

October 15, 2026
Next Post
ஆழியவளையில் பாழடைந்த கட்டிடத்திலிருந்து 14.5 கிலோ கஞ்சா மீட்பு!

ஆழியவளையில் பாழடைந்த கட்டிடத்திலிருந்து 14.5 கிலோ கஞ்சா மீட்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு