உயர் நீதிமன்ற மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு வயதை அதிகரிக்கும் அரசாங்கத்தின் முயற்சிகள் மற்றும் நீதித்துறையில் நிலவும் பிரச்சினைகள் குறித்து ஆலோசிக்க, எதிர்க்கட்சித் தலைவர்கள் மற்றும் முக்கியஸ்தர்களின் விசேட சந்திப்பு எதிர்வரும் வியாழக்கிழமை (23) நடைபெறவுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, நாமல் ராஜபக்ஷ உள்ளிட்டோர் இதில் பங்கேற்கவுள்ளனர். சஜித் பிரேமதாசவின் அழைப்பின் பேரில், கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இந்தச் சந்திப்பு நடைபெறுகிறது.
நீதிபதிகளின் ஓய்வு வயது நீடிப்பு, உயர் நீதிமன்றங்களில் நிலவும் நீதிபதி வெற்றிடங்கள் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஆராய்ந்து, அரசாங்கத்தின் திட்டத்திற்கு எதிராக ஒருங்கிணைந்த நடவடிக்கை தொடர்பில் இறுதி முடிவு எடுக்கப்படவுள்ளது.








