Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
முதலீட்டாளர் நம்பிக்கையில் இலங்கைக்கு முன்னேற்றம்; உலகில் 4 ஆவது வேகமான வளர்ச்சி! 

முதலீட்டாளர் நம்பிக்கையில் இலங்கைக்கு முன்னேற்றம்; உலகில் 4 ஆவது வேகமான வளர்ச்சி! 

2 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

முதலீட்டாளர் உறவுகள் மற்றும் கடன் வெளிப்படைத்தன்மை தொடர்பில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்ட வளர்ந்து வரும் சந்தை நாடுகளில் ஒன்றாக இலங்கை உருவெடுத்துள்ளதாக சர்வதேச நிதி நிறுவனம் (IIF) வெளியிட்டுள்ள 2026ஆம் ஆண்டுக்கான அறிக்கை தெரிவிக்கிறது.

அந்த அறிக்கையின்படி, அதிக முன்னேற்றம் கண்ட நாடுகளின் பட்டியலில் இலங்கை 4ஆவது இடத்தைப் பெற்றுள்ளதுடன், கடன் மறுசீரமைப்புக்குப் பின்னர் சர்வதேச முதலீட்டாளர்களின் நம்பிக்கையை மீட்டெடுக்கும் முயற்சிகளுக்கு இது முக்கிய அங்கீகாரமாகக் கருதப்படுகிறது.

2025ஆம் ஆண்டில் 37.33 ஆக இருந்த இலங்கையின் முதலீட்டாளர் உறவுகள் தொடர்பான மொத்த மதிப்பெண், 2026ஆம் ஆண்டில் 43.67 ஆக உயர்ந்துள்ளது. இதன் மூலம், மதிப்பீடு செய்யப்பட்ட 57 வளர்ந்து வரும் மற்றும் அபிவிருத்தி அடையும் பொருளாதார நாடுகளில் முதல் 25 சதவீதத்துக்குள் இலங்கை இடம்பிடித்துள்ளது.

முதலீட்டாளர் உறவுகள் மதிப்பீட்டில் 6.3 புள்ளிகள் முன்னேற்றம் பதிவுசெய்த இலங்கை, வியட்நாம், பெலிஸ் மற்றும் மொசாம்பிக் ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக அதிக முன்னேற்றம் கண்ட நாடாக தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது.

கடன் வெளிப்படைத்தன்மை நடைமுறைகளிலும் இலங்கை கணிசமான முன்னேற்றத்தைப் பதிவு செய்துள்ளது. 2025ஆம் ஆண்டில் 19ஆவது இடத்தில் இருந்த நாடு, 2026ஆம் ஆண்டில் 5ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

நிதி மற்றும் திட்டமிடல் அமைச்சின் தகவலின்படி, கடன் தொடர்பான தகவல்களை வெளிப்படையாக வெளியிடுதல், சுற்றுச்சூழல், சமூக மற்றும் நிர்வாக (ESG) தரவுகளை முறையாகப் பகிர்ந்துகொள்ளுதல், முதலீட்டாளர்களுடனான தொடர்புகளை வலுப்படுத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் இந்த முன்னேற்றத்திற்கு முக்கிய காரணங்களாக அமைந்துள்ளன.

பொதுக் கடன் முகாமைத்துவ அலுவலகம் (PDMO) உள்ளிட்ட அரச நிறுவனங்களின் தொடர்ச்சியான செயல்பாடுகள், இலங்கையின் சர்வதேச நம்பகத்தன்மையை உயர்த்தியுள்ளதுடன், எதிர்காலத்தில் முதலீட்டாளர் நம்பிக்கையையும் அரச பத்திர முதலீடுகளையும் அதிகரிக்க உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உலகளவில் பாதுகாப்பு, தூய்மையான எரிசக்தி, செயற்கை நுண்ணறிவு உட்கட்டமைப்பு மற்றும் சுகாதாரத் துறைகளில் அதிகரித்து வரும் முதலீட்டு தேவைகளால், கடன் வெளிப்படைத்தன்மை வளர்ந்து வரும் நாடுகளின் கடன் செலவுகளை நிர்ணயிக்கும் முக்கிய காரணியாக மாறியுள்ளதாக IIF தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதல்; இரு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் குறித்து ஐ.நா கவலை!
செய்திகள்

தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதல்; இரு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் குறித்து ஐ.நா கவலை!

September 12, 2026
ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகள் அல்ல அவர்கள் தீவிரவாதிகள் !
செய்திகள்

ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகள் அல்ல அவர்கள் தீவிரவாதிகள் !

September 12, 2026
கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்
செய்திகள்

கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்

September 12, 2026
மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான மொட்டு கட்சிக் கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பி. பங்கேற்பு!
செய்திகள்

மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான மொட்டு கட்சிக் கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பி. பங்கேற்பு!

September 12, 2026
நல்லூர் தேர் திருவிழாவில் தாலிக்கொடி அறுத்த பெண் கைது!
செய்திகள்

நல்லூர் தேர் திருவிழாவில் தாலிக்கொடி அறுத்த பெண் கைது!

September 12, 2026
விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் புதிய செயலாளராக ரோஷனி திசாநாயக நியமனம்!
செய்திகள்

விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் புதிய செயலாளராக ரோஷனி திசாநாயக நியமனம்!

September 12, 2026
Next Post
ஈரான் – அமெரிக்கா ஒப்பந்தம் சாத்தியம்; தோல்வியடைந்தால் தாக்குதல் என ட்ரம்ப் எச்சரிக்கை!

ஈரான் – அமெரிக்கா ஒப்பந்தம் சாத்தியம்; தோல்வியடைந்தால் தாக்குதல் என ட்ரம்ப் எச்சரிக்கை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.