பாறைச் சரிவு காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டிருந்த கொழும்பு – கண்டி பிரதான வீதியின் கடுன்னாவ பகுதி, இன்று காலை முதல் மீண்டும் போக்குவரத்துக்காக திறக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று (03) நிலவிய சீரற்ற வானிலை காரணமாக, கண்டி – கொழும்பு பிரதான வீதியின் கீழ் கடுன்னாவ பகுதியில் பாறைச் சரிவு ஏற்பட்டது. இதையடுத்து, பாதுகாப்பு காரணங்களால் கணேதென்ன மற்றும் கடுன்னாவ இடையிலான வீதிப் பகுதி தற்காலிகமாக மூடப்பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து, வானிலை சீரடைந்ததையடுத்து தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் பரிந்துரைகளின் அடிப்படையில் இன்று காலை 6.00 மணி முதல் குறித்த வீதி மீண்டும் போக்குவரத்துக்காக திறக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.








