Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பில் கசிப்பு சுற்றிவளைப்பின் போது பொலிஸார் மீது தாக்குதல்; இரு அதிகாரிகள் படுகாயம்!

மட்டக்களப்பில் கசிப்பு சுற்றிவளைப்பின் போது பொலிஸார் மீது தாக்குதல்; இரு அதிகாரிகள் படுகாயம்!

2 months ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி 35ஆம் கொலனி பகுதியில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையம் ஒன்றை சுற்றிவளைத்துச் சோதனை நடத்தச் சென்ற பொலிஸார் மீது தாக்குதல் நடத்தப்பட்டதில் இரு பொலிஸ் அதிகாரிகள் படுகாயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், வெல்லாவெளி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தலைமையில் ஜீப் வாகனம் மற்றும் மோட்டார் சைக்கிளில் சென்ற ஏழு பேர் கொண்ட பொலிஸ் குழு நேற்று (6) மாலை சுமார் 7.00 மணியளவில் 35ஆம் கொலனி பகுதியில் இயங்கியதாகக் கூறப்படும் கசிப்பு உற்பத்தி நிலையத்தை சுற்றிவளைத்துள்ளது.

இதன்போது, கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டதாகக் கூறப்படுபவர்களின் உறவினர்களான பெண்கள் உட்பட சுமார் 25 பேர் கொண்ட குழுவினர், பொல்லுகளால் பொலிஸார் மீது தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் பொலிஸார் சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

தாக்குதலில் காயமடைந்த இரு பொலிஸ் அதிகாரிகள் உடனடியாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

சம்பவத்தைத் தொடர்ந்து அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டதுடன், தாக்குதலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும், சம்பவ இடத்திற்கு சென்றிருந்த பொலிஸாரின் மோட்டார் சைக்கிள் ஒன்றும் காணாமல் போயுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதையடுத்து மேலதிக பொலிஸ் குழுக்கள் அப்பகுதிக்கு அனுப்பப்பட்டுள்ளதுடன், தாக்குதலில் ஈடுபட்டு தலைமறைவாகியுள்ள சந்தேகநபர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லாவெளி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

அனோஜனின் பெற்றோரை சந்தித்தார் சஜித் – விடுதலைக்கு உதவவும் உறுதி!
செய்திகள்

அனோஜனின் பெற்றோரை சந்தித்தார் சஜித் – விடுதலைக்கு உதவவும் உறுதி!

September 21, 2026
புற்றுநோயாளிகளுக்கான அத்தியாவசிய தடுப்பூசிக்கு கடும் தட்டுப்பாடு; ஜனாதிபதியிடம் அவசர கோரிக்கை!
செய்திகள்

புற்றுநோயாளிகளுக்கான அத்தியாவசிய தடுப்பூசிக்கு கடும் தட்டுப்பாடு; ஜனாதிபதியிடம் அவசர கோரிக்கை!

September 21, 2026
சவூதியில் மரண தண்டனை பெற்ற அனோஜனின் குடும்பத்தினர் சவூதி தூதரகத்துக்கு விஜயம்!
செய்திகள்

சவூதியில் மரண தண்டனை பெற்ற அனோஜனின் குடும்பத்தினர் சவூதி தூதரகத்துக்கு விஜயம்!

September 21, 2026
மன்னார் கடலில் எரிபொருள் இன்றி மிதந்த மீன்பிடிப் படகு; இரு மீனவர்கள் பாதுகாப்பாக மீட்பு
செய்திகள்

மன்னார் கடலில் எரிபொருள் இன்றி மிதந்த மீன்பிடிப் படகு; இரு மீனவர்கள் பாதுகாப்பாக மீட்பு

September 21, 2026
2008 திருகோணமலை பெண்கள் கடத்தல் விவகாரம்; இரு முன்னாள் கடற்படை வீராங்கனைகள் கைது!
செய்திகள்

2008 திருகோணமலை பெண்கள் கடத்தல் விவகாரம்; இரு முன்னாள் கடற்படை வீராங்கனைகள் கைது!

September 21, 2026
நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்தித் திறைசேரியை நிரப்பியுள்ளோம் – எதிர்வரும் பட்ஜெட்டில் மக்களுக்கு சுமை ஏற்பட்டுள்ள வரிகளை நீக்குவோம் ; ஜனாதிபதி
செய்திகள்

நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்தித் திறைசேரியை நிரப்பியுள்ளோம் – எதிர்வரும் பட்ஜெட்டில் மக்களுக்கு சுமை ஏற்பட்டுள்ள வரிகளை நீக்குவோம் ; ஜனாதிபதி

September 21, 2026
Next Post
குருவிட்ட சிறைச்சாலையில் மோதல்; இருவர் உயிரிழப்பு!

குருவிட்ட சிறைச்சாலையில் மோதல்; இருவர் உயிரிழப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு