Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மாமாங்கேஸ்வரர் ஆலய “தேர்” திருவிழா; விண்ணைப் பிளந்த பல்லாயிரக்கணக்கானபக்தர்களின் அரோகரா கோஷம்!

மாமாங்கேஸ்வரர் ஆலய “தேர்” திருவிழா; விண்ணைப் பிளந்த பல்லாயிரக்கணக்கானபக்தர்களின் அரோகரா கோஷம்!

2 months ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

கிழக்கிலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்க திருத்தலமான மட்டக்களப்பு அருள்மிகு ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் திராவிட முகப்புத்திர சிற்பத் தேர் உற்சவம், இன்று (11) செவ்வாய்க்கிழமை காலை 6.50 மணியளவில் பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ வெகுவிமர்சையாக நடைபெற்றது.

ஆலயத்தில் இடம்பெற்ற விசேட கிரியை வழிபாடுகளைத் தொடர்ந்து வசந்த மண்டப பூஜையும் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் ‘அரோகரா’ கோஷத்திற்கு மத்தியில் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளி மாமாங்கேஸ்வரர் அருள்பாலித்தார்.

மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய முப்பெருமைகளையும் ஒருங்கே கொண்ட இவ்வாலயத்தின் மஹோற்சவமானது கடந்த 3ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

இன்று காலை விநாயகர் மற்றும் கொடித்தம்பத்திற்கு விசேட பூஜைகள் நடத்தப்பட்டு, பஞ்சமுக விநாயகருக்கு வசந்த மண்டபத்தில் விசேட வழிபாடுகள் இடம்பெற்றதைத் தொடர்ந்து சுவாமி வீதியுலா சிறப்பாக நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து வெளிவீதியில் பஞ்சமுக விநாயகர் தேரில் ஆரோகணிக்க, அங்கு விசேட பூஜைகள் நடத்தப்பட்டு ஆயிரக்கணக்கான பெண் மற்றும் ஆண் பக்தர்கள் வடமிழுக்கத் தேர் உற்சவம் கோலாகலமாக நடைபெற்றது.

ஸ்ரீ ராமபிரானால் வழிபடப்பட்ட ஆலயம் என்ற பெருமையினையும், பிதுர்க்கடன் தீர்க்கும் புனிதத் தீர்த்தக் கேணியைக் கொண்ட தலமென்ற புகழினையும் உடையதாக இம்மாமாங்கேஸ்வரர் ஆலயம் விளங்கி வருகின்றது.

இவ்வாலயத்தின் ஆடி அமாவாசைத் தீர்த்தோற்சவம் நாளை (12) நண்பகல் வரலாற்றுச் சிறப்புமிக்க மாமாங்கேஸ்வரர் தீர்த்தக் கேணியில் நடைபெறவுள்ளது

Tags: BatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

நவம்பர் 1 முதல் TIN கட்டாயம்; வங்கி கணக்கு முதல் வாகனப் பதிவு வரை புதிய நடைமுறை
செய்திகள்

நவம்பர் 1 முதல் TIN கட்டாயம்; வங்கி கணக்கு முதல் வாகனப் பதிவு வரை புதிய நடைமுறை

September 25, 2026
கீரிமலையில் கழிவுகளை அகற்ற துரித நடவடிக்கை; வடக்கு ஆளுநர் பணிப்புரை
செய்திகள்

கீரிமலையில் கழிவுகளை அகற்ற துரித நடவடிக்கை; வடக்கு ஆளுநர் பணிப்புரை

September 25, 2026
கறுப்பு ஆடை அணிந்து பாராளுமன்றம் வந்த ஐக்கிய மக்கள் சக்தி எம்.பிக்கள்!
செய்திகள்

கறுப்பு ஆடை அணிந்து பாராளுமன்றம் வந்த ஐக்கிய மக்கள் சக்தி எம்.பிக்கள்!

September 25, 2026
வட்டி வீதம் தொடர்பில் மத்திய வங்கியின் அடுத்த முடிவு 30ஆம் திகதி
செய்திகள்

வட்டி வீதம் தொடர்பில் மத்திய வங்கியின் அடுத்த முடிவு 30ஆம் திகதி

September 25, 2026
சவுதி அரேபியாவில் மரண தண்டனை எதிர்கொள்ளும் இலங்கையருக்கு மன்னிப்பு கோரி முஸ்லிம் எம்.பிக்கள் கோரிக்கை!
செய்திகள்

சவுதி அரேபியாவில் மரண தண்டனை எதிர்கொள்ளும் இலங்கையருக்கு மன்னிப்பு கோரி முஸ்லிம் எம்.பிக்கள் கோரிக்கை!

September 25, 2026
நாமல் ராஜபக்ஷவுக்கு 70 மில்லியன் இலஞ்சம்; ஜானகி சிறிவர்தன ஒக்டோபர் 6 வரை விளக்கமறியலில்
செய்திகள்

நாமல் ராஜபக்ஷவுக்கு 70 மில்லியன் இலஞ்சம்; ஜானகி சிறிவர்தன ஒக்டோபர் 6 வரை விளக்கமறியலில்

September 25, 2026
Next Post
சிறைச்சாலைகளில் ஏற்பட்ட அமைதியின்மை; ரூ.255 மில்லியனுக்கும் அதிகமான சொத்து சேதம்!

சிறைச்சாலைகளில் ஏற்பட்ட அமைதியின்மை; ரூ.255 மில்லியனுக்கும் அதிகமான சொத்து சேதம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு