Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கொழும்பிலிருந்து கல்முனை நோக்கிப் பயணித்த பேருந்து விபத்து; தாயும் மகனும் உயிரிழப்பு

கொழும்பிலிருந்து கல்முனை நோக்கிப் பயணித்த பேருந்து விபத்து; தாயும் மகனும் உயிரிழப்பு

2 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

தம்புள்ளை – மஹியங்கனை பிரதான வீதியின் பகமூண, தமனயாய பகுதியில் இன்று (11) அதிகாலை இடம்பெற்ற கோர வீதி விபத்தில் தாயும் அவரது மகனும் உயிரிழந்துள்ளதுடன், ஒன்றரை வயது குழந்தை படுகாயமடைந்துள்ளது.

கொழும்பிலிருந்து கல்முனை நோக்கிப் பயணித்த தனியார் பயணிகள் பேருந்து, முன்னால் சென்றுகொண்டிருந்த உந்துருளியுடன் மோதியதிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

களுந்தேவ பகுதியில் நடைபெற்ற பிறந்தநாள் நிகழ்வொன்றில் கலந்துகொண்ட பின்னர், உந்துருளியில் வீட்டுக்குத் திரும்பிக்கொண்டிருந்தபோதே குறித்த குடும்பத்தினர் விபத்தில் சிக்கியுள்ளனர்.

தமனயாய பகுதியில் உந்துருளி திரும்ப முற்பட்ட சந்தர்ப்பத்தில், பின்னால் வந்த பேருந்து அதன்மீது மோதியதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

விபத்தில் உந்துருளியில் பயணித்த 63 வயதுடைய தாயாரும், அவரது 43 வயதுடைய மகனும் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், உயிரிழந்த நபருடன் பயணித்த ஒன்றரை வயதுடைய குழந்தை பலத்த காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பகமூண பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். இதனிடையே, சம்பவத்துடன் தொடர்புடைய தனியார் பேருந்தின் சாரதி பகமூண பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

விபத்துக்கான சரியான காரணம், பேருந்தின் வேகம் மற்றும் உந்துருளி திரும்பிய விதம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு ராமர் பாலத்துடன் தொடர்புடைய 3வது மணல் திட்டை நோக்கி பயணம்!
செய்திகள்

உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு ராமர் பாலத்துடன் தொடர்புடைய 3வது மணல் திட்டை நோக்கி பயணம்!

September 25, 2026
“ஹோர்முஸ் பாதுகாக்க ஈரானுடன் மோத தயார் பிரான்ஸ் அதிரடி!
உலக செய்திகள்

“ஹோர்முஸ் பாதுகாக்க ஈரானுடன் மோத தயார் பிரான்ஸ் அதிரடி!

September 25, 2026
22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் 95 மேலதிக வாக்குகளால் பாராளுமன்றில் நிறைவேற்றம்!
செய்திகள்

22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் 95 மேலதிக வாக்குகளால் பாராளுமன்றில் நிறைவேற்றம்!

September 25, 2026
நாட்டில் மேலும் 20 காடுகளுக்கு பாதுகாப்பு; 9,538 ஹெக்டேயர் வனப்பகுதி வர்த்தமானியில்
செய்திகள்

நாட்டில் மேலும் 20 காடுகளுக்கு பாதுகாப்பு; 9,538 ஹெக்டேயர் வனப்பகுதி வர்த்தமானியில்

September 25, 2026
இலஞ்சம் கொடுக்க முயன்ற முன்னாள் பிரதிமைச்சர் சரண குணவர்தனவின் மனைவி கைது
செய்திகள்

இலஞ்சம் கொடுக்க முயன்ற முன்னாள் பிரதிமைச்சர் சரண குணவர்தனவின் மனைவி கைது

September 25, 2026
நாமல் ராஜபக்ஷவுடன் புகைப்படம் எடுத்த ஆளும் கட்சி எம்.பிக்கள்; பாராளுமன்றத்தில் சர்ச்சை
செய்திகள்

நாமல் ராஜபக்ஷவுடன் புகைப்படம் எடுத்த ஆளும் கட்சி எம்.பிக்கள்; பாராளுமன்றத்தில் சர்ச்சை

September 25, 2026
Next Post
11 வயது சிறுமிக்கு தந்தையின் நண்பனால் நடந்த கொடூரம்; வவுனியா நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு

11 வயது சிறுமிக்கு தந்தையின் நண்பனால் நடந்த கொடூரம்; வவுனியா நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு