Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வெடுக்குநாரி ஆதிசிவன் ஆலய வளாகத்தில் புத்தர் சிலை வைக்கப்பட்டதால் பதற்றம்!

வெடுக்குநாரி ஆதிசிவன் ஆலய வளாகத்தில் புத்தர் சிலை வைக்கப்பட்டதால் பதற்றம்!

2 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

வவுனியா வடக்கு, நெடுங்கேணி வெடுக்குநாரி ஆதிசிவன் ஆலய வளாகத்தில் திடீரென புத்தர் சிலை ஒன்று கொண்டு வந்து வைக்கப்பட்டதைத் தொடர்ந்து அப்பகுதியில் கடும் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

​இன்று புரட்டாசிச் சனிக்கிழமையை முன்னிட்டு, வெடுக்குநாரி ஆலயத்தில் பெருந்திரளான இந்து பக்தர்கள் வருகை தந்து அன்னதானத்துடன் கூடிய விசேட வழிபாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், பௌத்த பிக்கு ஒருவர் தலைமையில் வருகை தந்த குழுவினர், ஆலய வளாகத்தில் புத்தர் சிலை ஒன்றை வைத்து பௌத்த மத வழிபாடுகளுக்கான ஏற்பாடுகளை முன்னெடுத்துள்ளனர். இதனால் அங்கு கூடியிருந்த இந்து மக்களிடையே அதிர்ச்சியும் எதிர்ப்பும் நிலவி வருகிறது.

சம்பவ இடத்தில் பெருமளவிலான பொலிஸாரும் விசேட அதிரடிப் படையினரும் குவிக்கப்பட்டுள்ளனர்.

ஆலயத்திற்குச் செல்லும் பக்தர்கள் வாகனங்களில் இருந்து இறக்கப்பட்டு, அவர்களின் பெயர் மற்றும் விவரங்களை முழுமையாகப் பதிந்த பின்னரே பொலிஸாரால் உள்ளே செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளூமன்ற உறுப்பகனர் கஜேந்தகரகுமார் பொன்னம்பலம், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன், வைத்தியர் பி. சத்தியலிங்கம், துரைராசா ரவிகரன் மற்றும் சட்டத்தரணி காண்டீபன் ஆகியோர் பொலிஸார் மற்றும் இராணுவத்தினருடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

​வழிபாட்டிற்கு வரும் பொதுமக்களை வழியில் மறித்து இடையூறு செய்யாமல், அவர்கள் சுதந்திரமாகச் சென்று இறைவனை வழிபட அனுமதிக்குமாறு மக்கள் பிரதிநிதிகள் பொலிசாரிடம் தீவிரமாகக் வலியுறுத்தி வருகின்றனர்.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

தமிழக கடற்பரப்பில் தத்தளித்த யாழ்ப்பாண மீனவர்கள் இருவர் இந்திய கடலோரக் காவல் படையினரால் மீட்பு!
செய்திகள்

தமிழக கடற்பரப்பில் தத்தளித்த யாழ்ப்பாண மீனவர்கள் இருவர் இந்திய கடலோரக் காவல் படையினரால் மீட்பு!

November 11, 2026
அம்பாறை வைத்தியசாலை சவக்கிடங்கில் 3 ஆண்களின் சடலங்கள்; உறவினர்களைத் தேடும் பொலிஸார்!
செய்திகள்

அம்பாறை வைத்தியசாலை சவக்கிடங்கில் 3 ஆண்களின் சடலங்கள்; உறவினர்களைத் தேடும் பொலிஸார்!

November 11, 2026
சிமெந்து விலை அதிகரிக்கப்பட்டதென்ற செய்தி பொய்யானது; அமைச்சர் வசந்த சமரசிங்க
செய்திகள்

சிமெந்து விலை அதிகரிக்கப்பட்டதென்ற செய்தி பொய்யானது; அமைச்சர் வசந்த சமரசிங்க

November 11, 2026
அஸ்வெசும பயனாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு; மேன்முறையீடுகளை சமர்ப்பிக்கும் கால அவகாசம் நீடிப்பு!
செய்திகள்

அஸ்வெசும பயனாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு; மேன்முறையீடுகளை சமர்ப்பிக்கும் கால அவகாசம் நீடிப்பு!

November 11, 2026
வருடாந்தம் 10,000 சிறுவர் துஷ்பிரயோக முறைப்பாடுகள் – இணையவழி ஆபத்துகளும் அதிகரிப்பு!
செய்திகள்

வருடாந்தம் 10,000 சிறுவர் துஷ்பிரயோக முறைப்பாடுகள் – இணையவழி ஆபத்துகளும் அதிகரிப்பு!

November 11, 2026
யாழ்ப்பாணத் தீவகத்தில் ஐந்து இடங்களில் மனிதப் புதைகுழிகள்?, விசாரணை அறிக்கையைச் சமர்ப்பிக்க பொலிஸார் தாமதம்!
செய்திகள்

யாழ்ப்பாணத் தீவகத்தில் ஐந்து இடங்களில் மனிதப் புதைகுழிகள்?, விசாரணை அறிக்கையைச் சமர்ப்பிக்க பொலிஸார் தாமதம்!

November 11, 2026
Next Post
பலவந்தமாக வாகனங்களை கையகப்படுத்தும் லீசிங் நிறுவனகளுக்கு பொலிஸ் திணைக்களம் எச்சரிக்கை

பலவந்தமாக வாகனங்களை கையகப்படுத்தும் லீசிங் நிறுவனகளுக்கு பொலிஸ் திணைக்களம் எச்சரிக்கை

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு