Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
புலத்சிங்கலவில் இரு இளைஞர்களுக்கு தீ வைப்பு; தம்பதி உள்ளிட்ட மூவர் கைது!

புலத்சிங்கலவில் இரு இளைஞர்களுக்கு தீ வைப்பு; தம்பதி உள்ளிட்ட மூவர் கைது!

2 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

களுத்துறை, புலத்சிங்கல பகுதியில் இரு இளைஞர்கள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவம் தொடர்பில் கணவன், மனைவி உள்ளிட்ட மூவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கடந்த 10ஆம் திகதி இரவு இடம்பெற்ற இந்த தாக்குதலில் புலத்சிங்கல பகுதியைச் சேர்ந்த இரு இளைஞர்கள் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பெண் ஒருவரை குறித்த இளைஞர்கள் கேலி செய்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் ஏற்பட்ட வாய்த்தர்க்கமே பின்னர் வன்முறையாக மாறியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் 29 வயதுடைய கணவன், அவரது மனைவி மற்றும் 19 வயதுடைய அவரது சகோதரர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட தம்பதியினர் பெண் ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பெண் பணியை முடித்துவிட்டு பேருந்தில் இருந்து இறங்கி கணவருடன் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தபோது, இளைஞர்கள் அவரை கேலி செய்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த கணவன், இளைஞர்களை எச்சரித்துவிட்டு அங்கிருந்து சென்றுள்ளார்.

எனினும், பின்னர் குறித்த இளைஞர்கள் அந்தப் பெண்ணின் வீட்டிற்கு அருகில் சென்றுள்ளனர். அங்கு இரு தரப்பினருக்கும் இடையே மீண்டும் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தைத் தொடர்ந்து, தம்பதி இளைஞர்கள் மீது பெட்ரோல் போத்தலை வீசி தீ வைத்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தாக்குதலில் படுகாயமடைந்த இரு இளைஞர்களும் முதலில் ஹொரணை ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அவர்கள் கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இதனிடையே, சம்பவத்தால் ஆத்திரமடைந்த பிரதேசவாசிகள் சந்தேகநபர்களின் வீட்டைத் தாக்கியதுடன், அங்கிருந்த சொத்துக்களுக்கும் சேதம் விளைவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

குற்றவாளியாக பெயரிடப்பட்டார் நாமல்!
செய்திகள்

குற்றவாளியாக பெயரிடப்பட்டார் நாமல்!

September 28, 2026
மட்டக்களப்பில் பொலிஸ் காவலில் உயிரிழந்த இளைஞன்- விசாரணையில் முன்னேற்றமில்லை!
செய்திகள்

மட்டக்களப்பில் பொலிஸ் காவலில் உயிரிழந்த இளைஞன்- விசாரணையில் முன்னேற்றமில்லை!

September 28, 2026
காட்டு யானைகளுக்கு உணவு வழங்கினால் சட்ட நடவடிக்கை
செய்திகள்

காட்டு யானைகளுக்கு உணவு வழங்கினால் சட்ட நடவடிக்கை

September 28, 2026
டுபாயில் போதைப்பொருள் வலையமைப்பு; இலங்கையில் இருந்து இயக்கியதாகக் கூறப்படும் இளைஞர் கைது!
செய்திகள்

டுபாயில் போதைப்பொருள் வலையமைப்பு; இலங்கையில் இருந்து இயக்கியதாகக் கூறப்படும் இளைஞர் கைது!

September 28, 2026
புதிய ‘அஸ்வெசும’ பயனாளர்கள் தெரிவு நிறைவு; விரைவில் பெயர்ப்பட்டியல் வெளியீடு!
செய்திகள்

புதிய ‘அஸ்வெசும’ பயனாளர்கள் தெரிவு நிறைவு; விரைவில் பெயர்ப்பட்டியல் வெளியீடு!

September 28, 2026
யாழில் திலீபனின் சிலை அகற்றப்பட்டதன் பின்னணியில் சிவிகே சிவஞானம்
காணொளிகள்

யாழில் திலீபனின் சிலை அகற்றப்பட்டதன் பின்னணியில் சிவிகே சிவஞானம்

September 28, 2026
Next Post
செம்மணி புதைகுழியில் மேலும் 8 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டன!

செம்மணி புதைகுழியில் மேலும் 8 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டன!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.