Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
புதிய ‘அஸ்வெசும’ பயனாளர்கள் தெரிவு நிறைவு; விரைவில் பெயர்ப்பட்டியல் வெளியீடு!

புதிய ‘அஸ்வெசும’ பயனாளர்கள் தெரிவு நிறைவு; விரைவில் பெயர்ப்பட்டியல் வெளியீடு!

1 hour ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

புதிய சுற்றில் ‘அஸ்வெசும’ நலன்புரிப் திட்டத்திற்கான பயனாளர்களைத் தெரிவு செய்யும் பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளதாக கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் உபாலி பன்னிலகே தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, எதிர்வரும் சில வாரங்களுக்குள் புதிய பயனாளர் பெயர்ப்பட்டியல் காட்சிப்படுத்தப்படும் என்றும், அதனடிப்படையில் எவரேனும் மேன்முறையீடு செய்ய விரும்பினால் அதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

அண்மையில் பாராளுமன்றத்தில் உரையாற்றிய நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ, அஸ்வெசும பயனாளர்கள் தொடர்பில் மீண்டும் கணக்கெடுப்பு நடத்தப்பட்டதாகத் தெரிவித்திருந்தார்.

இதற்கமைய, முதலாம் மற்றும் இரண்டாம் கட்டங்களில் பெறப்பட்ட விண்ணப்பங்களை உறுதிப்படுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வந்ததாகவும், இம்மாதத்திற்குள் அப்பணிகள் நிறைவடையும் என எதிர்பார்ப்பதாகவும் பாராளுமன்றத்தில் பிரதி அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

கடந்த 2023 ஆம் ஆண்டில் அஸ்வெசும பயனாளர்களின் எண்ணிக்கை 1,773,445 ஆக இருந்த போதிலும், அது 2024 ஆம் ஆண்டில் 1,761,116 ஆகப் பதிவாகியிருந்தது.

அத்துடன், கடந்த 2025 ஆம் ஆண்டில் பயனாளர்களின் எண்ணிக்கை 2,439,917 ஆகப் பதிவாகியிருந்த போதிலும், இந்த ஆண்டில் பயனாளர்களின் எண்ணிக்கை 1,251,522 ஆகக் குறைவடைந்துள்ளது.

அஸ்வெசும பயனாளர்களுக்கு நலன்புரி உதவிகளை வழங்கும் போது தீவிர வறுமைக்கோட்டிலுள்ளோர், வறுமைக்கோட்டிலுள்ளோர், ஆபத்தை எதிர்நோக்கியுள்ளோர் மற்றும் இடைநிலை நிலையில் உள்ளோர் என 4 பிரிவுகளின் கீழ் உதவிகள் வழங்கப்பட்டு வந்தன. 

இதில் கடந்த டிசம்பர் மாதத்துடன் இடைநிலை பிரிவினருக்கான கொடுப்பனவுகள் நிறைவடைந்ததுடன், ஆபத்தை எதிர்நோக்கியுள்ள பிரிவினருக்கான கொடுப்பனவுகள் கடந்த ஜூன் மாதத்துடன் நிறைவடைந்தன.

இதனடிப்படையில், தீவிர வறுமைக்கோட்டிலுள்ளோர் மற்றும் வறுமைக்கோட்டிலுள்ளோர் ஆகிய இரு பிரிவினருக்கு மட்டுமே அரசாங்கம் அஸ்வெசும நலன்புரிக் கொடுப்பனவை வழங்கி வந்த நிலையிலேயே, மீண்டும் இந்த கணக்கெடுப்புப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

காட்டு யானைகளுக்கு உணவு வழங்கினால் சட்ட நடவடிக்கை
செய்திகள்

காட்டு யானைகளுக்கு உணவு வழங்கினால் சட்ட நடவடிக்கை

September 28, 2026
டுபாயில் போதைப்பொருள் வலையமைப்பு; இலங்கையில் இருந்து இயக்கியதாகக் கூறப்படும் இளைஞர் கைது!
செய்திகள்

டுபாயில் போதைப்பொருள் வலையமைப்பு; இலங்கையில் இருந்து இயக்கியதாகக் கூறப்படும் இளைஞர் கைது!

September 28, 2026
யாழில் திலீபனின் சிலை அகற்றப்பட்டதன் பின்னணியில் சிவிகே சிவஞானம்
காணொளிகள்

யாழில் திலீபனின் சிலை அகற்றப்பட்டதன் பின்னணியில் சிவிகே சிவஞானம்

September 28, 2026
இலங்கையில் டெங்கு பாதிப்பு ஒரு லட்சத்தை கடந்தது!
செய்திகள்

இலங்கையில் டெங்கு பாதிப்பு ஒரு லட்சத்தை கடந்தது!

September 28, 2026
ஈரான் போர் முடிவுக்கு வந்தால் மசகு எண்ணெய் விலை அதலபாதாளத்திற்கு சரியும்; ட்ரம்ப்!
உலக செய்திகள்

ஈரான் போர் முடிவுக்கு வந்தால் மசகு எண்ணெய் விலை அதலபாதாளத்திற்கு சரியும்; ட்ரம்ப்!

September 28, 2026
பொலிஸ் உடற்கருவி கொள்வனவு கேள்விப்பத்திரத்தில் ChatGPT தகவல்கள்?; வசந்த முதலிகே குற்றச்சாட்டு
செய்திகள்

பொலிஸ் உடற்கருவி கொள்வனவு கேள்விப்பத்திரத்தில் ChatGPT தகவல்கள்?; வசந்த முதலிகே குற்றச்சாட்டு

September 28, 2026
Next Post
டுபாயில் போதைப்பொருள் வலையமைப்பு; இலங்கையில் இருந்து இயக்கியதாகக் கூறப்படும் இளைஞர் கைது!

டுபாயில் போதைப்பொருள் வலையமைப்பு; இலங்கையில் இருந்து இயக்கியதாகக் கூறப்படும் இளைஞர் கைது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு