Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பில் பொலிஸ் காவலில் உயிரிழந்த இளைஞன்- விசாரணையில் முன்னேற்றமில்லை!

மட்டக்களப்பில் பொலிஸ் காவலில் உயிரிழந்த இளைஞன்- விசாரணையில் முன்னேற்றமில்லை!

1 hour ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

மட்டக்களப்பு, இருதயபுரம் பகுதியைச் சேர்ந்த சந்திரகுமார் விதுசன் (21 வயது) என்ற தமிழ் இளைஞன், 2021 ஜூன் மாதம் பொலிஸ் காவலில் இருந்தபோது மரணமடைந்த சம்பவம் தொடர்பிலான விசாரணை கிழக்கு மாகாண குற்றப்புலனாய்வுத்துறைக்கு மாற்றப்படவுள்ளதாக சிரேஸ்ட சட்டத்தரணி சுகாஸ் தெரிவித்தார்.

விதுசனின் மரணம் தொடர்பான வழக்கு இன்றைய தினம் மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் நீதிபதி அ.தர்சினி முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருந்தது.

இந்த நிலையில் விதுசனின் குடும்பம் சார்பாக சிரேஸ்ட சட்டத்தரணி சுகாஸ் ஆஜராகியிருந்தார்.

கடந்த ஐந்து ஆண்டுகளாக இந்த வழக்கிலே பொலிஸாருடைய விசாரணைகளில் எந்தவிதமான முன்னேற்றகரமான நிலைமையும் இல்லாதிருப்பதை நீதிமன்றத்தினுடைய கவனத்துக்கு கொண்டு வந்து, இந்த வழக்கை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு மாற்றுவது பற்றி பரிசீலிக்குமாறு விண்ணப்பம் செய்திருந்தோம் என சட்டத்தரணி சுகாஸ் தெரிவித்தார்.

நீதிமன்றம் கடந்த தவணையிலேயே இது பற்றி சுயமாக ஆராய்ந்து, கிழக்கு மாகாண குற்றப் புலனாய்வுப் பிரிவினருடைய விசாரணைக்காக இந்த வழக்கை மாற்றுவதற்கு திட்டமிட்டிருந்ததாக அறியத் தந்திருக்கின்றார்கள். அந்த வகையில் எதிர்காலத்திலே இந்த வழக்கை கிழக்கு மாகாண குற்றப்புலனாய்வுப் பிரிவினர் விசாரிக்க இருக்கின்றார்கள். பாதிக்கப்பட்ட விதுஷனுடைய குடும்பத்தோடு சேர்ந்து நாங்களும் நீதிக்காக போராடுவோம், குரல் கொடுப்போம் எனவும் தெரிவித்தர்.

2021 ஜூன் 2ஆம் திகதி இரவு 10:30 மணியளவில் இருதயபுரத்தில் உள்ள அவரது வீட்டிற்கு வெளியே வைத்து, சிவில் உடையில் வந்த பொலிஸாரால் விதுசன் கைது செய்யப்பட்டு கொண்டுசெல்லப்பட்ட நிலையில் அடுத்த நாள் (ஜூன் 3) அதிகாலையில் விதுசன் உயிரிழந்துவிட்டதாகக் குடும்பத்தினருக்குத் பொலிஸாரினால் தகவல் வழங்கப்பட்டிருந்தது.

இது தொடர்பில் விதுசனின் குடும்பத்தினர் பொலிஸார் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்ததுடன் பொலிஸார் தாக்கியதனால்தான் தமது மகன் உயிரிந்திருந்ததாக தெரிவித்து இது தொடர்பில் மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றிலும் வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த நிலையில் இது தொடர்பான வழக்கு கடந்து ஐந்துவருடகாலமாக நடைபெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectionmattakkalappuseythikalSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

திலீபன் சிலை அகற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்!
காணொளிகள்

திலீபன் சிலை அகற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்!

September 28, 2026
குற்றவாளியாக பெயரிடப்பட்டார் நாமல்!
செய்திகள்

குற்றவாளியாக பெயரிடப்பட்டார் நாமல்!

September 28, 2026
காட்டு யானைகளுக்கு உணவு வழங்கினால் சட்ட நடவடிக்கை
செய்திகள்

காட்டு யானைகளுக்கு உணவு வழங்கினால் சட்ட நடவடிக்கை

September 28, 2026
டுபாயில் போதைப்பொருள் வலையமைப்பு; இலங்கையில் இருந்து இயக்கியதாகக் கூறப்படும் இளைஞர் கைது!
செய்திகள்

டுபாயில் போதைப்பொருள் வலையமைப்பு; இலங்கையில் இருந்து இயக்கியதாகக் கூறப்படும் இளைஞர் கைது!

September 28, 2026
புதிய ‘அஸ்வெசும’ பயனாளர்கள் தெரிவு நிறைவு; விரைவில் பெயர்ப்பட்டியல் வெளியீடு!
செய்திகள்

புதிய ‘அஸ்வெசும’ பயனாளர்கள் தெரிவு நிறைவு; விரைவில் பெயர்ப்பட்டியல் வெளியீடு!

September 28, 2026
யாழில் திலீபனின் சிலை அகற்றப்பட்டதன் பின்னணியில் சிவிகே சிவஞானம்
காணொளிகள்

யாழில் திலீபனின் சிலை அகற்றப்பட்டதன் பின்னணியில் சிவிகே சிவஞானம்

September 28, 2026
Next Post
குற்றவாளியாக பெயரிடப்பட்டார் நாமல்!

குற்றவாளியாக பெயரிடப்பட்டார் நாமல்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.