Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
காட்டு யானைகளுக்கு உணவு வழங்கினால் சட்ட நடவடிக்கை

காட்டு யானைகளுக்கு உணவு வழங்கினால் சட்ட நடவடிக்கை

44 minutes ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

கதிர்காமம் – புத்தல வீதியில் நடமாடும் காட்டு யானைகளுக்கு உணவு வழங்கும் வாகன சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

காட்டு யானைகளுக்கு உணவு வழங்கப்படுவதால், அவை வீதியை ஒட்டிய பகுதிகளில் தங்குவதற்குப் பழகியுள்ளதாகவும், இதன் காரணமாக வாகனங்கள் மீது காட்டு யானைகள் மேற்கொள்ளும் தாக்குதல்கள் அதிகரித்துள்ளதாகவும் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

தற்போது கதிர்காமம் – புத்தல வீதியில் சுமார் 8 காட்டு யானைகள் வாகனங்களை மறித்து உணவு பெறப் பழகியுள்ளன. தினசரி 2,000 க்கும் மேற்பட்ட வாகனங்கள் இந்த வீதியைப் பயன்படுத்துவதுடன், கதிர்காம யாத்ரீகர்கள் மற்றும் மொனராகலை, வெல்லவாய, பண்டாரவளை உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்லும் பெருந்திரளான மக்களும் இவ்வீதியைப் பயன்படுத்தி வருகின்றனர்.

வீதியில் நிற்கும் காட்டு யானைகளுக்கு உணவு வழங்கப்படாத சந்தர்ப்பங்களில், அவை வாகனங்களைத் தாக்குவதற்கும் தலைகீழாகப் புரட்டுவதற்கும் முயலும் சம்பவங்களும் பதிவாகியுள்ளன. அண்மையில் காட்டு யானை ஒன்று பஸ் வண்டி ஒன்றைத் தாக்கியதில், அந்த பஸ் கவிழ்ந்து சுமார் 40 பேர் காயமடைந்திருந்தனர்.

கடந்த 6 ஆண்டுகளில் காட்டு யானைகளின் தாக்குதலால் 3 பெண்களும் 2 ஆண்களும் உயிரிழந்துள்ளதாகவும், ஆண்டுதோறும் 100 க்கும் மேற்பட்ட வாகனங்கள் சேதமடைவதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

யால தேசிய பூங்காவின் 2 ஆம் மண்டலத்திற்குட்பட்ட இவ்வீதியில் பயணிக்க மக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தாலும், வாகனங்களில் இருந்து இறங்குவதும் வனவிலங்குகளுக்கு உணவு வழங்குவதும் சட்டவிரோதமான செயலாகும்.

கொரோனா பெருந்தொற்று காலத்தில் வாகனப் போக்குவரத்து கட்டுப்படுத்தப்பட்டிருந்தபோது, இந்த யானைகள் வீதியில் தங்காமல் காடடர்ந்த பகுதிகளிலுள்ள இயற்கை உணவுகளை உட்கொண்டு வந்ததாக அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

பஸ் சாரதிகள் மற்றும் சஃபாரி ஜீப் சாரதிகள் உணவு வழங்குவதாலேயே யானைகள் இதற்குப் பழகியுள்ளதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வனஜீவராசிகள் கட்டளைச் சட்டத்தின் கீழ் வனவிலங்குகளுக்கு இடையூறு விளைவிக்கும் குற்றத்தின்கீழ், உணவு வழங்கும் வாகனங்களைக் காணொளி பதிவு செய்து, சம்பந்தப்பட்ட நபர்களுக்கு எதிராக வழக்குத் தொடர நடவடிக்கை எடுக்கப்படும் என ஊவா மாகாண வனஜீவராசிகள் உதவிப் பணிப்பாளர் டபிள்யூ. ஏ. இந்திரஜித் தெரிவித்துள்ளார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectionmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

டுபாயில் போதைப்பொருள் வலையமைப்பு; இலங்கையில் இருந்து இயக்கியதாகக் கூறப்படும் இளைஞர் கைது!
செய்திகள்

டுபாயில் போதைப்பொருள் வலையமைப்பு; இலங்கையில் இருந்து இயக்கியதாகக் கூறப்படும் இளைஞர் கைது!

September 28, 2026
புதிய ‘அஸ்வெசும’ பயனாளர்கள் தெரிவு நிறைவு; விரைவில் பெயர்ப்பட்டியல் வெளியீடு!
செய்திகள்

புதிய ‘அஸ்வெசும’ பயனாளர்கள் தெரிவு நிறைவு; விரைவில் பெயர்ப்பட்டியல் வெளியீடு!

September 28, 2026
யாழில் திலீபனின் சிலை அகற்றப்பட்டதன் பின்னணியில் சிவிகே சிவஞானம்
காணொளிகள்

யாழில் திலீபனின் சிலை அகற்றப்பட்டதன் பின்னணியில் சிவிகே சிவஞானம்

September 28, 2026
இலங்கையில் டெங்கு பாதிப்பு ஒரு லட்சத்தை கடந்தது!
செய்திகள்

இலங்கையில் டெங்கு பாதிப்பு ஒரு லட்சத்தை கடந்தது!

September 28, 2026
ஈரான் போர் முடிவுக்கு வந்தால் மசகு எண்ணெய் விலை அதலபாதாளத்திற்கு சரியும்; ட்ரம்ப்!
உலக செய்திகள்

ஈரான் போர் முடிவுக்கு வந்தால் மசகு எண்ணெய் விலை அதலபாதாளத்திற்கு சரியும்; ட்ரம்ப்!

September 28, 2026
பொலிஸ் உடற்கருவி கொள்வனவு கேள்விப்பத்திரத்தில் ChatGPT தகவல்கள்?; வசந்த முதலிகே குற்றச்சாட்டு
செய்திகள்

பொலிஸ் உடற்கருவி கொள்வனவு கேள்விப்பத்திரத்தில் ChatGPT தகவல்கள்?; வசந்த முதலிகே குற்றச்சாட்டு

September 28, 2026

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.