Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
அக்கரைப்பற்று பிரதேச சபையின் புதிய உதவித் தவிசாளராக எம்.எச். சுபைதா உம்மா பதவிப் பிரமாணம்

அக்கரைப்பற்று பிரதேச சபையின் புதிய உதவித் தவிசாளராக எம்.எச். சுபைதா உம்மா பதவிப் பிரமாணம்

2 months ago
in அரசியல், செய்திகள், முக்கிய செய்திகள்

அக்கரைப்பற்று பிரதேச சபையின் புதிய உதவித் தவிசாளராக எம்.எச். சுபைதா உம்மா உத்தியோகபூர்வமாக பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.

அக்கரைப்பற்று பிரதேச சபை தவிசாளர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில், தேசிய காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவரும் அக்கரைப்பற்று மாநகர சபை மேயருமான ஏ.எல்.எம். அதாஉல்லாஹ் முன்னிலையில் எம்.எச். சுபைதா உம்மா தனது பதவிப் பிரமாணத்தை மேற்கொண்டார்.

இந்நிகழ்வில் பிரதேச சபை தவிசாளர் ஏ.எம். அஸ்ஹர், முன்னாள் தவிசாளர் எம்.ஏ. ராஷிக், அக்கரைப்பற்று மாநகர சபையின் பிரதி மேயர் அப்துல் ஹையு, தேசிய காங்கிரஸ் கட்சியின் பொருளாளர் வசீர் எம் ஜுனைட் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

மேலும், அக்கரைப்பற்று பிரதேச சபையின் செயலாளர் எல்.எம். இர்பான், பிரதேச சபை உத்தியோகத்தர்கள், சபை உறுப்பினர்கள் எம்.எச். பைறூஸ், எம். இத்ரிஸ் உள்ளிட்டோரும், அக்கரைப்பற்று மாநகர சபை உறுப்பினர்களான எம்.நஜிமுடீன், ஏ.எல்.எம்.பாஹிம் உள்ளிட்டோரும், தேசிய காங்கிரஸ் கட்சியின் முக்கியஸ்தர்கள் மற்றும் சுபைதா உம்மாவின் குடும்ப உறுப்பினர்களும் நிகழ்வில் பங்கேற்றனர்.

இதன்போது, தேசிய காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவரும் அக்கரைப்பற்று மாநகர சபை மேயருமான ஏ.எல்.எம். அதாஉல்லாஹ் மற்றும் புதிய உதவித் தவிசாளர் எம்.எச். சுபைதா உம்மா ஆகியோருக்கு சுபைதா உம்மாவின் குடும்பத்தினரால் பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

அக்கரைப்பற்று பிரதேச சபையில் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் சார்பில் உறுப்பினராக அங்கம் வகிக்கும் எம்.எச். பைறூஸ் அவர்களின் சகோதரியே புதிய உதவித் தவிசாளர் எம்.எச். சுபைதா உம்மா என்பதும் குறிப்பிடத்தக்கது.

புதிய உதவித் தவிசாளராக பதவியேற்றுள்ள எம்.எச். சுபைதா உம்மாவுக்கு அரசியல் பிரமுகர்கள், சபை உறுப்பினர்கள், உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

மண்சரிவு அபாயத்தில் வாழ்ந்த 51 குடும்பங்களுக்கு புதிய வீடுகள்!
செய்திகள்

மண்சரிவு அபாயத்தில் வாழ்ந்த 51 குடும்பங்களுக்கு புதிய வீடுகள்!

September 28, 2026
திலீபன் சிலை அகற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்!
காணொளிகள்

திலீபன் சிலை அகற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்!

September 28, 2026
குற்றவாளியாக பெயரிடப்பட்டார் நாமல்!
செய்திகள்

குற்றவாளியாக பெயரிடப்பட்டார் நாமல்!

September 28, 2026
மட்டக்களப்பில் பொலிஸ் காவலில் உயிரிழந்த இளைஞன்- விசாரணையில் முன்னேற்றமில்லை!
செய்திகள்

மட்டக்களப்பில் பொலிஸ் காவலில் உயிரிழந்த இளைஞன்- விசாரணையில் முன்னேற்றமில்லை!

September 28, 2026
காட்டு யானைகளுக்கு உணவு வழங்கினால் சட்ட நடவடிக்கை
செய்திகள்

காட்டு யானைகளுக்கு உணவு வழங்கினால் சட்ட நடவடிக்கை

September 28, 2026
டுபாயில் போதைப்பொருள் வலையமைப்பு; இலங்கையில் இருந்து இயக்கியதாகக் கூறப்படும் இளைஞர் கைது!
செய்திகள்

டுபாயில் போதைப்பொருள் வலையமைப்பு; இலங்கையில் இருந்து இயக்கியதாகக் கூறப்படும் இளைஞர் கைது!

September 28, 2026
Next Post
சைகை மொழி சட்டமூலம் விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்; அமைச்சர்!

சைகை மொழி சட்டமூலம் விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்; அமைச்சர்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு